Published : 23 Sep 2015 11:13 AM
Last Updated : 23 Sep 2015 11:13 AM

உணவைத் தடை செய்யலாமா?

கூலி வேலை செய்பவர் அன்றைய தினம் உழைத்துச் சம்பாதித்த சொற்ப பணத்தில் தனக்குப் பிடித்தமான மாமிச உணவை சாப்பிடக் கூடாது எனச் சொன்னால், அடுத்த நாள் அவரால் பளு தூக்க முடியுமா? கடலோடி மீன் பிடிப்பதும், மீன் விற்பதும், மீன் உண்பதும் தவறு என தடை போட்டால் அதற்கு அர்த்தம் என்ன?

ஒருவருடைய விருப்பம், உணர்வு, கலாச்சாரம், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் வாழ்க்கை முறையையும் சார்ந்ததுதான் உணவுப் பழக்கம். புலால் உணவு என்பது மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சிலரின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல பெருவாரியான மக்களின் வாழ்க்கை முறைக்குத் தடை போட முயற்சிக்கக் கூடாது.

- எச். பாஷா, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x