Published : 17 Sep 2020 07:14 AM
Last Updated : 17 Sep 2020 07:14 AM

கல்வி அமைப்பின் சர்வாதிகாரம்

தேர்வில் ஒரு ஆண்டு விட்டதை மறு ஆண்டில் பிடிப்பது பணக்கார மாணவர்களுக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால், ஏழை மாணவர்களுக்கும், சமூகத்தின் கீழடுக்கில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இது வாழ்க்கைப் பிரச்சினை. பிஹாரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் யாதவுக்கும் அப்படித்தான். பிஹாரின் தர்பங்காவைச் சேர்ந்த மாணவர் சந்தோஷுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது அவரது ஊரிலிருந்து 700 கி.மீ. தொலைவில் இருக்கும் கொல்கத்தாவில். இத்தனைக்கும் சனிக்கிழமை காலை 8 மணிக்கே அவர் புறப்பட்டுவிட்டார். மொத்தம் மூன்று பேருந்துகள் மாறியிருக்கிறார். இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக 6 மணி நேரம் தாமதமாகியிருக்கிறது.

கொல்கத்தாவின் சீல்தா ரயில் நிலையத்துக்கு அருகே இறங்கியபோது மதியம் 1.07. அங்கிருந்து டாக்ஸி பிடித்துக்கொண்டு தேர்வு மையத்துக்கு அவர் வரும்போது மணி 1.40. தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு இறுதிக் கெடு 1.30 என்பதால் தேர்வு மைய அதிகாரிகள் அவரை உள்ளே விடவில்லை. சந்தோஷ் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ‘பத்து நிமிடத் தாமதத்தால் ஒரு வருஷத்தை இழந்து நிற்கிறேன்’ என்று புலம்பிக்கொண்டே ஊர் திரும்பியிருக்கிறார் சந்தோஷ். நமது கல்வி அமைப்பும் தேர்வு முறைகளும் எவ்வளவு நெகிழ்ச்சியின்மையைக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் என்ற விமர்சனக் குரல்கள் உருவாகியிருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x