Published : 28 Jul 2020 07:58 AM
Last Updated : 28 Jul 2020 07:58 AM

ராவ் பேசுகிறார்…

பிரதமராக உங்கள் ஆட்சிக் காலத்தில் எந்தச் சாதனைகள் குறித்து நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறீர்கள்?

முழு ஆட்சிக் காலத்துக்கான அரசாங்கச் செயல்பாட்டைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரிக்க முடியாது என்று நினைக்கிறேன்: அது ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு முழுமை. ஒருவர் மகிழ்ச்சிகொள்ளும் விஷயத்தையும் அது கொண்டிருக்கும், ஒருவர் விரும்பாத விஷயத்தையும் அது கொண்டிருக்கும். நடைமுறையில் ஒன்றில்லாமல் இன்னொன்று இருப்பது மிகவும் கடினம். இது போன்ற கருத்துகளெல்லாம் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும்போது வருபவை.

உங்களுக்கு ஏதாவது வருத்தங்கள் உண்டா? முடிவடையாத செயல்திட்டங்கள் ஏதும் உண்டா? வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று நீங்கள் விரும்புவது ஏதும் உண்டா?

எந்த வருத்தங்களும் இல்லை. முடிவடையாத செயல்திட்டம் என்பது ஒரு நிரந்தர அம்சமாகும்; அது மற்றவர்களால் நிறைவேற்றப்படும். நான் வேறொரு நபராக இல்லாதபட்சத்தில் நான் வேறு வகையில் செய்திருக்கக் கூடிய விஷயங்களைப் பற்றி நினைப்பது வீண்.

உங்கள் முன்னோடிகள் சிலரைப் போல ஆளுமைக் கவர்ச்சி மிக்கவராக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? மக்கள் திரளைக் கவர்ந்திழுக்கும் திறனைத் தவிர தலைமைத்துவத்தை வழங்குவதற்கு வேறு சில வழிமுறைகள் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

வேறு யாராக இருக்கவும் எந்த நேரத்திலும் நான் விரும்பியதில்லை.

நீங்கள் நல்ல பிரதமராக இருந்தீர்கள், ஆனால் சராசரியான, இன்னும் சொல்லப்போனால் மோசமான கட்சித் தலைவராக இருந்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் சொல்வதுண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸுக்கு நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

கட்சியின் புதிய செயல்திட்டத்தை விளக்குவது மிகவும் கடினம். ஏழைகளைப் பற்றிப் பேசுவது மிகவும் எளிது, அவர்களுக்கு எப்படி உதவுவதென்று தெரியாமல்கூட. எனது அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உண்மையில் நன்றாகத் திட்டமிடப்பட்டவை; அதைவிட நன்றாக, முறையாகச் செயல்படுத்தப்பட்டவை. ஆயினும், அவை முறையற்று, ஒவ்வொரு ஆண்டும் வந்தன, எந்த ஆண்டும் அவற்றுக்கு உறுதியான, வலுவான கவனம் கிடைக்கவில்லை. வழக்கம்போல பலவீனமான விளம்பரக் கட்டமைப்பைக் கொண்டிருந்த அரசிடமிருந்தும் சரி, இந்தத் திட்டங்களை விளக்குவதில் அக்கறை செலுத்த வேண்டியிருந்த கட்சியிடமிருந்தும் சரி. எப்போதும் கண்ணுக்குத் தெரியாத, சில சமயம் கண்ணுக்குத் தெரியக் கூடிய ஒரு வேகத்தடை இருந்தது. அதை உணரவும் முடிந்தது; ஆனால், அதை அகற்றுவதோ உடைத்தெறிவதோ மிகவும் கடினமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x