Published : 14 Sep 2015 10:57 AM
Last Updated : 14 Sep 2015 10:57 AM

மகாகவியின் நகைச்சுவை!

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ல் கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘சின்னச் சங்கரன் கதை’ அத்தனை சுவையாக இருந்தது.

சமூகப் பார்வையும், தேசபக்தியும் நிறைந்த தேசியக் கவியாக மட்டுமல்லாமல், நகைச்சுவை ததும்பும் எழுத்துக்கும் சொந்தக்காரர் பாரதி என்று என்னைப் போன்றவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள். இந்தக் கதையை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எழுதியிருக்கிறார்.

ஆனால், இன்று வாசித்தால், இப்போதுதான் எழுதியதுபோல் இருக்கிறது. அவரது நினைவாக அவரது கட்டுரையைப் பிரசுரித்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

- ஆர். லெனின், பெருந்துறை.

***

சின்னச் சங்கரன் கதை என்ற கட்டுரை படித்தேன். பாரதியின் எழுத்துத் திறமையுடன் அறிவுத் திறமையைக் கதையின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

அன்றைய நாட்டு நடப்பை ஒரு கதாபாத்திரம் மூலம் இவ்வளவு அழகாக வர்ணிக்க பாரதியால் மட்டுமே முடியும். ராமசாமிக் கவுண்டரைப் பற்றியும் அன்றைய தேதியில் பணம் படைத்தவர்களின் நடவடிக்கைகளையும் துதிபாடிகளின் செயல்களையும் மிகவும் அற்புதமாக வர்ணனை செய்துள்ளார்.

உண்டு கொழுத்து வீணாக வாழ்பவரைப் பற்றி நன்கு விவரித்துள்ளார்.

பாரதியின் எழுத்துக்களை என்று படித்தாலும் ஆனந்தமே.

பாரதி நினைவு நாளில் நல்ல கட்டுரை தந்தமைக்குப் பாராட்டுகள்.

- ஜீவன். பி.கே.6,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x