Published : 07 Jul 2020 06:30 AM
Last Updated : 07 Jul 2020 06:30 AM

நவீன அலோபதி மருந்து போலவே மாற்று மருந்தையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா?

பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், ‘கோவிட்-19’ காய்ச் சலை குணப்படுத்தும் மருந்து தயாரித்துள்ளதாக கூறியது. அதன் செயல்திறன் பற்றி எந்தவித ஆதார மும் இல்லாமல் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. இந்நிலையில், ஆயுர்வேதா அல்லது வேறு மாற்று மருந்துகளை, நவீன அலோபதி மருந்துகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளைக் கொண்டு மதிப்பிட வேண்டுமா?

இதுகுறித்து டாக்டர் பாவனா பிரஷர் (ஆயுர்வேத டாக்டர், சிஎஸ்ஐஆர் - ஜெனோமிக்ஸ் அண்ட் இன்ட கிரேட்டிவ் பயாலஜி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி) டாக்டர் எஸ்.பி.கலந்திரி (வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர்) ஆகியோர் அளித்த பேட்டி:

டாக்டர் பாவனா, ஆயுர்வேதாவில் புதிய மருந்து களை பரிசோதனை செய்வதற்கான உண்மையான நடைமுறைகள் என்ன?

பாவனா: ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்து வதற்கு 2 முறைகள் உள்ளன. முதலாக இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் கீழ் பட்டிய லிடப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்துகள். இந்த மருந்துகள் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த ஆயுர்வேத மருந்துகளை புதிய சூழ்நிலை யில் அதாவது தற்போது ‘கோவிட்-19’ காய்ச்சலுக் குப் பயன்படுத்த நினைத்தால், அதற்கான ஆதாரங் களை அளிக்க வேண்டும். அதன்பிறகு மனிதர்களுக்கு நேரடியாக வழங்கி பரிசோதிக்கலாம். அதற்கு முன்னர் அதில் நச்சுத்தன்மை உள்ளதா என்பது பற்றியும், ஆய்வகப் பரிசோதனையும் செய்ய வேண்டிய தில்லை. ஏனெனில், அந்த ஆயுர்வேத மருந்துகள் காலம் காலமாக புரிந்து கொள்ளப்பட்டவை.

இரண்டாவது, ஒரு புதிய சூழ்நிலைக்கான புதிய பார்முலாவுடன் புதிய ஆயுர்வேத மருந்தாக இருந்தால், அவற்றில் நச்சுத்தன்மை உள்ளதா என்பதைப் பற்றியும் அதன் செயல்திறன் பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

வழக்கமான மருந்து பரிசோதனையில் பல படிநிலைகள் உள்ளன. அதேபோன்ற விதிமுறைகள் ஆயுர்வேதா மருந்துகளுக்கும் பொருந்துமா?

பாவனா: பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மதிப்பீடு செய்வதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கு ஒரு புதிய மருந்தை நம்பத்தகுந்த முறையில் ஒப்பிடக்கூடிய எந்த மருந்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல், பாதிப்புள்ள ஒட்டுமொத்த மக்களுக் கும் ஒரே மருந்து பலனளிக்கும் என்று சொல்ல முடி யாது. முடிவாக என்ன பலன் கிடைக்கிறது என் பதைப் பொருத்துதான் ஒரு மருந்து மதிப்பிடப்படு கிறது. இதுதொடர்பாக. மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (சிசிஆர்எஸ்) தெளிவான வழிகாட்டியை அளித்துள்ளது.

டாக்டர் கலந்திரி, ‘கோவிட்-19’ விஷயத்தில், பல மருந்துகள் மருந்து நிறுவனங்களால் பரிந்துரை செய்யப் படுகின்றன. அந்த மருந்துகள் ‘ஆன்டிவைரல்’களாக விளம்பரப்படுத்துகின்றன. குறிப்பாக, ‘ரெம்டெசிவிர்’ மாத்திரை விஷயத்தில் பார்த்தோம். எனவே, மருந்து நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், சற்று எளி தானவை என்று உங்களுக்குத் தெரியுமா? மேலும் மாற்று மருத்துவம் பரிந்துரைக்கும் மருந்துகளை நிரூபிக்க அதிக ஆதாரங்கள் கேட்டு சுமை ஏற்படுத்தப்படுகிறதா?

கலந்திரி: ஆயுர்வேதா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். கடந்த கால அனுபவங்களை வைத்து, இந்த மருந்து சிறந்தது என்றோ, புதிய நோயை குணப்படுத்தும் என்றோ, எளிமையானது என்றோ சொல்ல முடியுமா? அதற்கு எபோலா வைரஸ் மிகச்சிறந்த உதாரணம். சில மருந்துகள் எபோலா வைரஸை அழிப்பதில் சிறப்பாக செயல்பட்டன. அதே மருந்து ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கும் சரியாக இருக்குமா என்று முயற்சித்தோம். ஆனால், அந்த மருந்துகள் பலனளிக்கவில்லை.

நீங்கள் அலோபதி அல்லது யுனானி, சித்தா, ஹோமியோபதி அல்லது வேறு மாற்று மருத்து வத்தை பின்பற்றுவது முக்கியமல்ல. ஆனால் எல்லா வற்றுக்கும் அறிவியல் கொள்கைகள் உள்ளன. அவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

புதிய மருந்து பரிசோதனை தொடர்பான விவரங்கள் மருத்துவ இதழில் வெளியிடப்படும். அதைப் பார்க்கும் நிபுணர்கள், அந்த மருந்தின் பலன்கள் அல்லது செயல் திறனற்ற தன்மை குறித்து மதிப்பிடுவார்கள். இதுபோன்ற நடைமுறைகள், மாற்று மருந்துகள் விஷயத்தில் அடிக்கடி நடக்கிறதா? புதிய மருந்தின் ‘நெகட்டிவ்’ முடிவுகள் வெளியாகிறதா?

பாவனா: ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சி குறித்த கட்டுரைகள், அதிகம் பேரால் பார்க்கப்படும் இதழ் களில் வெளியாவதில்லை. அதேநேரத்தில் ஆயுர் வேதம் என்பது வெறும் அனுபவத்தால் வந்தது மட்டுமல்ல. அதற்கு ஆதாரமான ஆவணங்கள் உள் ளன. ஆயுர்வேத இதழ்களில் வெளியாகும் தகவல் களை, பல பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி யாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். இதை மேம்படுத்த வேண்டும். ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான இதழ்களை மேம்படுத்த வேண்டும்.

ஒரு நோய் முற்றிய நிலையில், தொழில்நுட்பத்தின் உதவி அவசியம். கோவிட்-19 விஷயத்தில் உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் போன்ற கருவிகளைச் சொல்லலாம். எனவே உயிர் காக்கும் கருவிகளை எப்படி ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் ஒருங்கிணைப்பீர்கள்?

பாவனா: ஆயுர்வேதத்தில் உயிர் காக்கும் கருவி களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள நவீன ஆயுர்வேத நிறுவனங்களுக்கு சென்று பாருங் கள். அங்கு வென்டிலேட்டர் போன்ற கருவிகளை பயன்படுத்துகின்றனர். ஆயுர்வேதம் வைரஸை மட்டும் ஆய்வதில்லை. உணவு, தூக்கம் போன்ற உடல்நலன் குறித்தும் ஆயுர்வேதம் ஆராய்கிறது.

டாக்டர் கலந்திரி, ஆயுர்வேதம் - நவீன மருத்துவ முறை களை ஒருங்கிணைக்க வழி இருக்கிறதா? அல்லது இரண் டும் இணையான வழிகளில் செல்ல கூடியவையா?

கலந்திரி: என்னைப் பொறுத்த வரையில் இரண்டை யும் ஒருங்கிணைத்து பார்க்கும் கண்ணோட்டம், இரு தரப்புக்கும் வெற்றி - வெற்றி என்ற சூழ்நிலையை உருவாக்கும். ஆயுர்வேதம் ஒரு மனிதனை முழுமை யாகப் பார்க்கிறது. ஆனால், நவீன மருத்துவம் ஒரு செல், ஒரு உறுப்பு அல்லது உடலின் ஒரு பகுதியில் உள்ள ஒரு நோய் என்ற கோணத்தில் பார்க்கிறது. முழு உடலில் உள்ள சில உறுப்புகளை விட, ஒட்டு மொத்த உடலும் மிக முக்கியம் என்று ஆயுர்வேதம் நம்புகிறது. ஆனால், நவீன மருத்துவத்தையும் ஆயுர்வேதாவையும் நீங்கள் இணைக்கும் போது, அடிப்படை அறிவியல் மற்றும் நெறிமுறைகளை மறந்துவிட கூடாது.

மருத்துவ முறை எதுவாக இருந்தாலும், அவற்றின் மருந்துகள் உற்பத்தி எல்லாம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் கைகளில்தான் உள்ளன. அப்படி இருக்கும் போது, 2 மருத்துவ முறைகளின் மருந்துகளை குறைத்து மதிப்பிட முடியுமா?

கலந்திரி: இதை நான் ஒப்புக் கொள்கிறேன். உதாரணத்துக்கு பெவிபிரவிர் மாத்திரை 14 நாட்களுக்கு அளிக்க ரூ.13,000 செலவாகும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த மாத்திரை வெறும் காய்ச்சல் மற்றும் சளிக்கு வழங்கப்படுவது. நம் நாட்டில் பெரும்பாலான மக்களால் இந்தளவுக்கு செலவு செய்து மாத்திரை வாங்க முடியாது. எனவே, இந்த நேரத்திலாவது மருந்து நிறுவனங்களுக்கும் மருந்து விலைக்குமான இணைப்பை துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் பாவனா பிரஷர் மற்றும் டாக்டர் எஸ்.பி. கலந்திரி ஆகியோர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x