Published : 08 Aug 2015 11:00 AM
Last Updated : 08 Aug 2015 11:00 AM

பெருக்குத் தொடரும் பொழுதுபோக்கும்

முனைவர் ஆர்.சிவராமன் பெருக்குத் தொடரின் வலிமையை ஒரு கதை மூலம் விளக்கியுள்ளது அருமை. பெருக்குத் தொடரில், ஒரு எண் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கக் கிடைக்கும் தொடர் எண்களைக் கொண்டவையாகும். உதாரணம்: 3,15,75, 375,.. அதி வேகமாக அதிகரித்துச் செல்வதைப் பார்க்கலாம். பெருக்குத் தொடரைப் போலப் பல்வகைத் தொடர்கள் உண்டு. கூட்டுத் தொடர் என்பதில் ஒரு எண்ணோடு ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்ந்து கூட்டக் கிடைப்பதாகும்.

எடுத்துக்காட்டு: 3,8,13,18,... எடுத்துக்காட்டாகக் கொடுத்த பெருக்குத் தொடரும், கூட்டுத் தொடரும் ஒரே எண்ணில் தொடங்கியும் ஒரே எண்ணால் கூட்டப்பட்டோ, பெருக்கப்பட்டோ இருந்தாலும் பெருக்குத் தொடரின் வளர்ச்சி வேகத்தைப் பார்த்து அதிசயிக்கலாம். கூட்டுத் தொடரில் நான்காம் எண் 18, பெருக்குத் தொடரில் அது 375. நாமே ஒரு விதியை உருவாக்கித் தொடர்களை உருவாக்கலாம். நல்ல பொழுதுபோக்காகும்.

- ச.சீ. இராஜகோபாலன், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x