Published : 18 Mar 2020 07:46 AM
Last Updated : 18 Mar 2020 07:46 AM

காணொலித் தூதுவர்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அப்படிப் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்று சந்தேகிக்கப்படுபவர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப்படும் தனிமை வார்டு அனுபவம் பல இடங்களில் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால், கேரளத்தில் அப்படி இல்லை என்கிறார் கண்ணூரைச் சேர்ந்த ஷக்கீர் ஷுபன்.

உலகம் சுற்றும் வாலிபரான இவரது காணொலிகள் கேரளத்தில் பிரபலம். பைக்கில் உலகச் சுற்றுலா மேற்கொண்ட இவர், ஈரானில் நோய்ப் பரவல் அதிகமாக இருந்த ராஷ்ட் பகுதிக்கெல்லாம் சென்றிருக்கிறார். ஜியார்ஜியாவில் நுழையவிருந்த தருணத்தில் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய காரணத்தால் ஷக்கீர் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்து துபாய் வழியாக விமானத்தின் மூலம் கேரளத்துக்கு வந்துசேர்ந்தார். விமான நிலையத்திலேயே அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு அவசர ஊர்தி மூலம் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே மூன்று நாட்கள் தனி வார்டில் வைக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த மூன்று நாட்களையும் மூன்று அத்தியாயங்களாகக் காணொலி மூலம் பதிவுசெய்து தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டார். இறுதியில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் அக்கறையாலும் கவனிப்பாலும் தன்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள் என்று ஷக்கீர் பகிரவே அந்தக் காணொலிகள் வைரலாகின. இதன் மூலம் கேரள அரசு கரோனாவுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நல்லெண்ணத் தூதுவர்போல ஆகியிருக்கிறார் ஷக்கீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x