Published : 01 Aug 2015 10:46 AM
Last Updated : 01 Aug 2015 10:46 AM

கல்விச் சூழலில் தற்கொலைகள்

‘ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்!’ எத்தனை காத்திரமான விவாதப் பொருள், எத்தனை தாக்கம் ஏற்படுத்தும் தலைப்பு. எத்தனை சிந்திக்கத் தூண்டும் அந்தச் சிறுவனின் புகைப்படம்! ச. மாடசாமியின் எழுத்துக்களில் கல்வி நிலையங்கள் குறித்த உளவியல் பாடத்தை, மனித மனங்கள் மீதான ஓவியத் தீற்றல்களை, வகுப்பறை அனுபவங்களின் வெளிச்சக் கீற்றுகளை வாசிக்கப் பெறுவது எப்போதுமே ஓர் அற்புதமான விஷயம்.

கவியரசு கண்ணதாசன் திரைப்படப் பாடல் ஒன்றில்

‘சிறிய காயம் பெரிய துன்பம்

ஆரும் முன்னே அடுத்த காயம்

உடலில் என்றால் மருந்து போதும்

உள்ளம் பாவம் என்ன செய்யும்?’

(வசந்த மாளிகை) என்று எழுதியிருப்பார். வலி, வேதனை, அவமதிப்பு என இன்னபிறவற்றை உட்கொண்டு எதிர்ப்புணர்ச்சியோடு வளரக் கற்கவும் வாய்ப்பில்லாத சமூகச் சூழல், பண்பாட்டுச் சிக்கல் போன்றவை மாணவர் முன் சம காலத்திய முக்கியச் சவாலாக வளர்ந்து நிற்கின்றன.

கல்விச் சூழலில் தற்கொலைகள் வெறும் கணக்கெடுப்புகளைத் தாண்டிப் பேசப்படுவதில்லை. அன்றாடம் அதை நோக்கி உணர்வுகளால் துரத்தப்பட்டு, மரணத்தைத் தொட்டுத் தொட்டு மீண்டுகொண்டிருக்க நேரும் மாணவர் இதயங்கள் குறித்து சமூகத்துக்கு எந்த விழிப்புணர்வுமில்லை. நம்பிக்கை விதைகளை உள்ளார்ந்த முறையில் கோரும் விண்ணப்பக் கடிதம் இந்தக் கட்டுரை.

- எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x