Published : 08 Aug 2015 11:00 AM
Last Updated : 08 Aug 2015 11:00 AM

தங்கம் வாங்கத் துப்பில்லை

தங்கம் விலை குறைய ஆரம்பித்ததிலிருந்தே நடுத்தர மக்களின் வீட்டில் எந்த ஆண்களும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒரு பொட்டுத் தங்கம் வாங்கத் துப்பில்லை, சம்பாதிக்கும் பணத்தை என்னதான் செய்யறீங்களோ? பேசாம என் கையில கொடுத்தீங்கன்னா இந்நேரம் தங்கமா வாங்கிக் குவிச்சிருப்பேன். என் தங்கச்சி வீட்டுக்காரர் வெளிநாட்டிலிருந்து அனுப்பற காசுல தங்கமா வாங்கிக் குமிக்கிறா? நீங்க ஒண்ணுக்கும் லாயக்கில்லை, சம்பாதிக்கவும் துப்பில்லை. இந்தப் பேச்சுகளை தினசரி கேட்க வேண்டியுள்ளது. ‘சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்’ கட்டுரை இதை அப்படியே புட்டுப்புட்டு வைத்திருக்கிறது. நன்றி!

- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x