Published : 22 Jul 2015 10:41 AM
Last Updated : 22 Jul 2015 10:41 AM

நிதானமான அணுகுமுறை தேவை

சச்சார் கமிட்டி அறிக்கையை ஆழமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து, நேர்த்தியான கட்டுரை (சீர்திருத்தங்களும் சந்தேகங்களும்) வடித்திருக்கிறார் அ.மார்க்ஸ். மசூதிகளில் முழுநேரப் பணியாளர்களாகப் பணிபுரியும் இமாம்களில் பலர் பட்டதாரிகளாகவும் முதுகலைப் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

இப்போது பல அரபுக் கல்விக் கூடங்கள், மதரசாக்கள் மதக் கல்வியுடன் பல்கலைக்கழகப் படிப்பையும் இணைத்தே கல்வி தருகின்றன. ஆனால், இதையெல்லாம் மறைத்து மதரசாக்கள் தீவிரவாதிகளை உருவாக்கும் பயிற்சிக் களங்கள் என்றும் அவற்றை மூட வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

அதன் தொடர்ச்சிதான் மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு. கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் முஸ்லிம்கள் பிற நாட்டு அறிவுச்செல்வங்களைப் புறக்கணிக்கிற பாரம்பரியம் கொண்டவர்களல்ல;

கிரேக்கத் தத்துவங்கள் அறிவியல் கருத்துக்கள் எல்லாம் காலத்தால் அழிக்கப்பட்டபோது, முஸ்லிம் சிந்தனையாளர்கள் அவற்றைப் போற்றிப் பாதுகாத்தனர். எனவே, இதுபோன்ற விஷயங்களில் அரசுக்கு நிதானமான அணுகுமுறை தேவை.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x