Published : 26 May 2015 10:47 AM
Last Updated : 26 May 2015 10:47 AM

செய்தி இதழ்கள் என்னவாகும்?

‘பேஸ்புக்: நண்பரா, எதிரியா?’ எனும் தலையங்கம் தற்காலத்தின் மிக முக்கிய விவாதத்தை அலசியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அறிவியல் முன்னேற்றம் ஏற்படும்போது வரவேற்பும் எதிர்ப்பும் சரிவிகிதத்தில் இருக்கத்தான் செய்யும். நாளடைவில் அந்த எதிர்ப்பு மறைந்துவிடும்.

அச்சு ஊடகங்கள் வழியாகச் செய்திகளைப் படித்துப் பழகியவர்களுக்கு தற்போது இணையத்தின் வழியாக - குறிப்பாக, பேஸ்புக்கின் மூலம் படிப்பது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.

அதேசமயம், இணையம் மூலம் விளம்பர வருமானம் அவ்வளவாகக் கிடைக்காத நிலையில், பேஸ்புக்கில் நேரடியாகச் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இதை எப்படிச் சமாளிக்கப் போகின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x