Published : 13 Mar 2015 10:49 AM
Last Updated : 13 Mar 2015 10:49 AM

ஏ.டி.எம்-மில் வரும் கள்ள நோட்டுக்கு யார் பொறுப்பு?

‘ஏ.டி.எம்-மில் கள்ள நோட்டு' செய்தி படித்தேன். ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் முன் கள்ள நோட்டுக்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் என்றில்லாமல், முற்றிலுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஏனென்றால், ஏ.டி.எம்-மில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு, பாரதத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (BSNL) தொலைபேசி மற்றும் அலைபேசிகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும்போதோ எல்.ஐ.சி-யில் பிரீமியத் தொகை செலுத்தும்போதோ, செலுத்தும் பணத்திலுள்ள 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களின் எண்களை, பில்களில் எழுத வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.

‘ஏ.டி.எம்-மில் இருந்து பணம் எடுக்கும் போது 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்களை ஏ.டி.எம் அல்லது அந்த வங்கிக்குப் பொறுப்பான யாரும் எழுதித்தருவதில்லை.

அப்படியிருக்க, அந்த நோட்டுகளின் எண்களுடன் பி.எஸ்.என்.எல், அல்லது எல்.ஐ.சி-யிலோ பணத்தைக் கட்டி, அவற்றில் கள்ள நோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு வாடிக்கையாளர் எப்படிப் பொறுப்பாவார்?

குற்றமற்ற வாடிக்கை யாளரைத் தண்டிக்காமல் இருப்பதற் கும், கள்ள நோட்டுக்களின் புழக்கத் தைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்ய வேண்டும்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x