Published : 05 Feb 2015 11:08 AM
Last Updated : 05 Feb 2015 11:08 AM

வணிக மருத்துவம்

மனம் என்ற ஒன்றை இன்றைய மருத்துவம் கண்டுகொள்வதே இல்லை. வெறும் மருந்து, மாத்திரைகள் மட்டுமே நம் உயிர் காப்பதில்லை.

கூடவே, அனுசரணையும் ஆத்மார்த்த அரவணைப்பும் அன்பும் சேர்ந்தால்தான், அதன் பலன் நமக்குக் கிடைக்கும். இன்றைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளியை வாழவைப்பதைவிட, மருத்துவமனைகளை வாழ வைப்பதற்காகவே செயல்படுகின்றன.

சாதாரண நோய்களுக்குக்கூட ஓரிரு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கச் சொல்கிறார்கள் என்கிற பொதுவான குற்றச்சாட்டு எல்லோரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. சேவை மனப்பான்மையோடு தொடங்கிய மருத்துவம், படிப்படியாய் வணிகமயமாய் மாறி, இன்று வழிப்பறி நிலைக்கு வந்து நிற்கிறது.

ஏ.எம். நூர்தீன்,சோளிங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x