Published : 21 Feb 2015 10:58 AM
Last Updated : 21 Feb 2015 10:58 AM

இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு

நபி இப்ராஹிம் காலத்திலிருந்தே இஸ்லாமும் கிறிஸ்தவமும் சகோதரத்துவத்துடன் இணைந்தே வளர்ந்துவந்திருக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) கூட ஒரு முறை கிறிஸ்தவப் பாதிரிமார்களை அன்புடன் வரவேற்று, அவர்கள் இறைவணக்கம் புரிவதற்கு வசதி செய்துகொடுத்தார் என்பது வரலாறு. இஸ்லாமியர்களில் சிலர், இஸ்லாத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத தீவிரவாதத்தைக் கையிலெடுக்கும்போது பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள்தான் என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது.

எப்படி இந்தியாவில் அரசியல் லாபத்துக்காக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விரோதத்தையும் குரோதத்தையும் திட்டமிட்டு வளர்த்தார்களோ அதேபோல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. பல நாடுகளில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மத நல்லிணக்கத்தோடுதான் வாழ்ந்துவருகிறார்கள். துபாய், சவூதி போன்ற இஸ்லாமிய நாடுகளில்கூட கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாகத்தான் வாழ்கிறார்கள். ஐ.எஸ். என்ற பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டால், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x