Published : 27 Feb 2015 10:23 AM
Last Updated : 27 Feb 2015 10:23 AM

என் சகோதரியைக் கொன்ற அலட்சியம்

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய சகோதரியின் உயிரைப் பன்றிக் காய்ச்சல் பறித்தது. அவருக்கு வயது 33-தான். பெங்களூரில் வாழ்ந்துவந்த அவர், ஒரு சனிக்கிழமை அன்று பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவுகள் திங்கட்கிழமை மாலையில்தான் வந்தன. கேட்டால், ஞாயிற்றுக்கிழமை ஆய்வகம் இயங்குவதில்லை என்றார்கள். திங்கட்கிழமைக்குப் பிறகும்கூட அதைப் பற்றி எங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

அதற்குப் பிறகு, நான்கு நாட்களுக்குள் அவர் இறந்துபோனார். காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட என் சகோதரிக்கு உண்மையில் என்ன காய்ச்சல் என்பதை 3 நாட்களுக்குப் பிறகே மருத்துவர்கள் கண்டறிந்தார்கள்.

பன்றிக் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசுதான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகுவார்கள். மருத்துவமனைகள் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை உடனடியாக மேற்கொண்டு, சிகிச்சையையும் உடனடியாக ஆரம்பித்தால் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இறப்புகளின் எண்ணிக்கை கணக்கற்றுப் போவதற்குள் அரசு செயல்பட ஆரம்பித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- கார்த்திக்,‘தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x