Published : 12 Nov 2014 11:15 AM
Last Updated : 12 Nov 2014 11:15 AM

லஞ்சம் ஒரு மனநோய்

‘லஞ்சம் வாங்குவதில் பத்திரப்பதிவு, மின்வாரியம் முன்னிலை' என்கிற செய்தி படித்து அதிர்ச்சி அடைந்தேன். இன்றைக்கு அரசு ஊழியர்கள் நிறைவான சம்பளம் பெறும் நிலையிலும், லஞ்சம் குறையாமல் இருப்பதற்குக் காரணம், ஆடம்பரமும் பேராசையும்தான். வருமானத்துக்குள் செலவு செய்யக் கற்றுக்கொள்ளாததால், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் கை நீட்டவே செய்வார்கள். லஞ்சம் வாங்குவதும் ஒரு மனநோய்தான். லஞ்சம் அதிகமாக வாங்கும் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் செய்தியை வெளியிடுவதன் மூலம், லஞ்சம் கேட்பவர்களுக்குப் பயமும் கொடுப்பவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- ஜேவி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x