Last Updated : 02 Jun, 2017 09:28 AM

 

Published : 02 Jun 2017 09:28 AM
Last Updated : 02 Jun 2017 09:28 AM

ஒரு நிமிடக் கட்டுரை: பசுநேசர் நீதிபதி சர்மா என்னவெல்லாம் சொன்னார்?

மாட்டரசியல் தொடர்பான விவாதங் களை மக்களிடம் கொண்டுசெல்வதில் இப்போதெல்லாம் அரசியல்வாதி களுக்கு இணையான சர்ச்சைகளை நீதிபதிகளும் கிளப்பத் தொடங்கியிருக்கிறார்கள். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, தன்னுடைய பணிக் காலத்தின் கடைசி நாளன்று தெரிவித்த கருத்துகள் நாடெங்கும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அன்னார் தெரிவித்த கருத்துகளில் முக்கியமான சில இங்கே!

$தேசிய பிராணியாகப் பசு அறிவிக்கப்பட வேண்டும். பசுக் கொலைக்கான தண்டனையை 10 ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக உயர்த்த வேண்டும்.

$பசுவின் சிறுநீரால் கிடைக்கும் 11 நற்பலன்கள், பசு நெய் மற்றும் பஞ்சகவ்யத்தைச் சாப்பிடுவதால் ஏழு அனுகூலங்கள் ஏற்படுகின்றன.

$தாய்ப்பசு ஒன்றுதான் ஆக்சிஜனைச் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது.

$பசுவில் 33 கோடி தேவர்களும் தேவதைகளும் உறைந்திருக்கின்றனர். பசு மாடு தன் கொம்புகள் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை உறிஞ்சுகிறது.

இப்படி பசுவின் சிறப்புகளைப் பற்றிப் பலவிதக் கருத்துகளைத் தெரிவித்த சர்மா, அவற்றின் பாதுகாப்புக்காகப் பலவிதமான வழிகாட்டுதல்களையும் அளித்தார். அவற்றினூடே பசுவின் சட்டரீதியிலான காவலர்களாக அவர் நியமித்தது, மாநில அரசுத் தலைமைச் செயலர் மற்றும் அட்வகேட் ஜெனரல் இருவரையும்.

$தனக்கு வழக்கறிஞர் சங்கத்தால் அளிக்கப்பட்ட வழியனுப்பு விழாவில் பேசிய நீதிபதி சர்மா, தனது தீர்ப்பை ‘ஆன்மாவின் குரல்’ என்று வர்ணித்ததோடு, “பசுவை தேசிய பிராணியாக ஆக்க வேண்டுமென்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்” என்றும் தெரிவித்தார். அதன் பின்னர், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். “ஆண் மயில் வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்கிறது. பெண் மயிலுடன் அது உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீர் துளிகளைப் பருகியே பெண் மயில் கர்ப்பமாகிறது. அப்படித்தான் மயில் குஞ்சுகள் பிறக்கின்றன” என்று அப்போது சர்மா குறிப்பிட்டார்!









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x