Published : 20 Jan 2016 10:56 AM
Last Updated : 20 Jan 2016 10:56 AM

இயற்கையோடு வாழ்வோம்

‘காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?’ கட்டுரை படித்தேன். நாம் நமது பாரம்பரியம் மிக்க மாட்டினங்களை அழித்துவிட்டோம். ஊசி போடுவதால் மட்டுமே அதிக அளவு பால்தரும் மாடுகளை வளர்ப்பதுதான் நோய்களின் பெருக்கத்துக்குக் காரணம் என்று தெரிந்தும், வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே நாம் கொண்டாடுகிறோம்.

இயற்கை விவசாயத்தை ஆதரவளிப்பவர்கள்கூட, நாட்டு மாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படாதது வேதனை அளிக்கிறது. எல்லாவற்றையும் பணம் சம்பாதிக்க மட்டுமே என பார்க்கத் தொடங்கிவிட்டதால், நமது பாரம்பரியப் பெருமைக்குரிய விஷயங்கள் பலவும் அழிந்துவருகின்றன. பல நாடுகள் நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வியந்து போற்றுகின்றன. அந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை, வலுவாய் உணர்த்தும் விவசாயி செல்வத்தின் வழியைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x