Published : 01 Aug 2016 12:59 PM
Last Updated : 01 Aug 2016 12:59 PM

அநியாயத்தின் உச்சம்!

வங்கிகளின் வராக் கடன் 9 லட்சம் கோடியாக உள்ளது. அதில், பெருமுதலாளிகளின் கடன்களே அதிகம். அந்தப் பெருமுதலாளிகளின் கடன்களை வசூலிக்க வங்கித் துறை, தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தாதது ஏன்?

ஏழைகளின் மீது கருணை காட்டாத இயலாத இரக்கமற்ற மனநிலையை அவர்கள் பெற்றது எங்ஙனம்? இந்நிலைக்கு அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, அந்தக் கடமையிலிருந்து தவறியதோடு, நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர்களில் ஒருவரை தனியார் நிறுவனத்தைக்கொண்டு சாகடித்திருப்பது அநியாயத்தின் உச்சம்!

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x