Published : 01 Jul 2016 10:58 AM
Last Updated : 01 Jul 2016 10:58 AM

குற்றம் குறைய வழி

'சுவாதி கொலை வழக்கு விசாரணையில் தொய்வு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்' செய்தியை வாசித்தேன். நீதிமன்றத்தின் செயல்பாடும் அணுகுமுறையும் அருமை.

இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலமே நீதிமன்றங்கள் பாமரமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த முடியும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் நீதிமன்றம் கறாராகச் செயல்பட்டால், குற்றச்செயல்கள் தானாகக் குறைந்துவிடும்.

- ராஜா, 'தி இந்து' இணையதளம் வழியாக.

***

மீண்டும் கொல்லாதீர்கள்

சுவாதியை நடத்தைக் கொலை செய்யாதீர்கள் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கோரிக்கை நியாயமானது. 'சுவாதியின் நடத்தை குறித்து மனம் போன போக்கில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்புவது, புதைக்கப்பட்ட சுவாதியின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் படுகொலை செய்வதற்குச் சமமானதாகும்.

சுவாதி கொல்லப்பட்டது குறித்த தகவல் அறிந்தவர்கள் அதைக் காவல் துறையிடம் தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.

- பா.ஸ்ரீவத்சன், நியூடெல்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x