Published : 29 Aug 2016 08:51 AM
Last Updated : 29 Aug 2016 08:51 AM

என்ன நினைக்கிறது உலகம்: சொந்த மக்களைக் கொல்லும் அரசு!

அல் அரேபியா (ஆங்கிலம்) - சவுதி ஊடகம்



சிரியா அதிபர் பஷார் அல் அஸாதின் ஆட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு முறை குளோரின் குண்டு தாக்குதல் நடந்திருக்கலாம் என்று ஐநா மற்றும் ரசாயன ஆயுதங்கள் தடைக்கான அமைப்பைச் சேர்ந்த விசா ரணை அதிகாரிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிரியாவில் தொடர்ந்து நடத்தப்படும் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை முதன் முறையாகக் கண்டறிந்திருக்கிறது ஐநா.

சிரியா மக்கள் எத்தனை கோரமான சூழலில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள் என்பதை ஐநா தற்போது உணரத் தொடங்கியிருக்கும் சூழலில், சிரியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு அந்நாட்டு அரசைப் பொறுப்பேற்கச் செய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை. “தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் குளோரினை ஒரு ஆயுதமாகத் தனது சொந்த மக்கள் மீதே சிரியா அரசு தொடர்ந்து பயன்படுத்திவந்திருக்கிறது என்பதை மறுக்கும் வாய்ப்பே இப்போது இல்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியிருக்கிறார் என்கிறது சி.என்.என்.

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்காவும் ரஷ்யா வும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. அது ஒருபோதும் பலனளிக்கவில்லை. ‘ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் தொடர்பான ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பிறகும், சிரியா அரசு ரசாயன ஆயுதத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தியது’ என்கிறது இந்த அறிக்கை.

2013 ஆகஸ்ட் 22-ல், சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சரின் வாயு குண்டுகளைப் பயன்படுத்தி, அந்நாட்டு அரசு நடத்திய மோசமான தாக்குதலுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா அரசு ரசாயன ஆயுதங்களில் சிலவற்றைத் தன்னுடனே வைத்துக்கொள்கிறது அல்லது அவை வைக்கப்பட்டிருக்கும் இடங்களை வெளியிட மறுக்கிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகின. தன் வசம் உள்ள ரசாயன ஆயுதங்கள் தொடர்பாக, தானே அறிக்கை அளிப்பதற்கு சிரியா அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டதுதான் இந்த ஒப்பந்தத்தின் விநோதம்!

இதற்கிடையே, தண்டனையிலிருந்து தப்புவதற்கான முழு வாய்ப்புடன், மக்கள் மீது தொடர்ந்து குளோ ரின் தாக்குதல்களை நடத்திவருகிறது சிரியா - சமீபத்தில், ஸெப்தியா பகுதியில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் உட்பட! ஆனால், ஐநாவோ அல்லது அதன் வேறு அமைப்புகளோ சிரியா அரசின் மீது நடவடிக்கை எடுத்ததாகவோ அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டதாகவோ தெரியவில்லை. அஸாத் அரசு அரங்கேற்றிய கொடூரங்கள் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான பிற அறிக்கைகளைப் போலவே, தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையும் கிடப்பில் போடப்படும். அரசியல் சூழல் என்றைக்கு அனுமதிக்கிறதோ அன்றைக்குத்தான் அது கருத்தில்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

எனினும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, சிரியா அரசின் மீது போர்க் குற்றம் தொடர்பாக எதிர்காலத் தில் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்வதற்கு இந்த அறிக்கை வழிவகுக்கக் கூடும். அதுவரை, தண்டிக்கப் படுவோம் என்ற எந்த அச்சமும் இல்லாமல், தொடர்ந்து குளோரின் தாக்குதல்களை சிரியா அரசு நடத்திக்கொண் டிருக்கும். ரசாயனத் தாக்குதல்கள் தொடர்பான சிரியா அரசின் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்பட வில்லை என்றால், சிரியா ராணுவம் கட்டுப்பாடுகள் பற் றிய எந்தப் பயமும் இல்லாமல் ரசாயனத் தாக்குதல் களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும். சிரியா மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு நாடும் முன்வராது!

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x