Published : 19 Jul 2016 12:52 PM
Last Updated : 19 Jul 2016 12:52 PM

மத்திய அரசின் கடமை

பாலாற்றின் குறுக்கே உயரம் அதிகரிக்கப்படும் தடுப்பணைகள் செய்தியைப் படித்தேன். தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றைத் தவிர, பிற பெரிய ஆறுகள் அனைத்தும் வெளி மாநிலங்களில் இருந்துதான் உற்பத்தியாகின்றன. அதற்குப் பிரதி உபகாரமாக இங்கிருந்து உணவுப் பொருட்களும் காய்கறிகளும் செல்கின்றன.

'தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் வரவில்லையெனில், கேரள மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்று முன்பு ஒருமுறை நடிகர் மம்மூட்டி கூறியது நினைவுக்குவருகிறது. எனவே, கேரளத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரையும் கர்நாடகா, ஆந்திரத்தில் இருந்து நியாயமாக வர வேண்டிய நீரையும் தமிழகத்துக்குப் பெற்றுத்தர மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x