Published : 12 Sep 2016 09:36 AM
Last Updated : 12 Sep 2016 09:36 AM

என்ன நினைக்கிறது உலகம்?- நெதன்யாகுவுடன் அப்பாஸ் பேசவேண்டும்

இஸ்ரேல் நாளிதழ் 'தி ஜெருசலேம் போஸ்ட்' வெளியான தலையங்கம்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதே மிகக் குறைவு. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் 2015-ல் பாரிஸ் நகரில் நடந்தபோது இருவரும் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டதோடு சரி. 2010 முதலாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியதால், நெதன்யாகு வுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் மேற்குக் கரைப் பகுதிகளில் குடியிருப்புகளை உருவாக்குவதை 10 மாதங்களுக்கு இஸ்ரேல் நிறுத்திவைத்தது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. ஒன்பது மாதகாலம் கடந்த பிறகும் அப்பாஸ் அவரது கருத்துகளையோ நடவடிக்கைகளையோ மாற்றிக்கொள்ளவில்லை. இஸ்ரேலை யூதர்களின் நாடாக அப்பாஸ் ஏற்றுக் கொண்டால் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தி வைத்துள்ள காலத்தை மேலும் நீட்டிப்பதாக நெதன்யாகு அறிவித்தார். அப்பாஸ் மறுத்துவிட்டார். ஒரு வாய்ப்பு தவறிப்போனது.

எதிரிகளுட னான நேரடிப் பேச்சு வார்த்தை களுக்கு மாற்றங் களை உருவாக் கும் ஆற்றல் உண்டு. நமது எதிரியோடு பேசும்போது அவரும் மனிதத்தன்மை உள்ளவர் என்று நம்மால் உணர முடியும். இட்சாக் ரபீனும் யாசர் அராபத்தும் கைகுலுக்கிய வரலாற்று நிகழ்வால் மாற்றம் எதுவும் வரவில்லை. அதற்குப் பிறகும் அராபத் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களைத்தான் தொடுத்தார்.

அப்பாஸை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சந்திக்கத் தயார் என்று நெதன்யாகு பல சமயங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். குடியிருப்புகளைக் கட்டுவதை நிறுத்த வேண்டும், பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அப்பாஸ் முன்நிபந்தனைகள் விதித்தார். ஆனால், தற்போது எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் மாஸ்கோவில் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அப்பாஸ் அறிவித்துள்ளதாகப் பாலஸ்தீன விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அப்பாஸ் சம்மதித்திருப்பதாக அவர் கூறுகிறார். இதில் அப்பாஸின் உண்மையான நிலை என்று தெரியவில்லை. ஆனால் மறுபக்கத்தில் நெதன்யாகு சம்மதிக்காததால் இந்தக் கூட்டம் நடக்காது என்றும் அப்பாஸே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் நட்புறவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பாலஸ்தீனர்களுக்கு உணர்த்த அப்பாஸ் தவறியுள்ளார். இஸ்ரேலை ஒரு சைத்தான் போலவும் சித்தரிக்கிறார். இஸ்ரேலின் மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை அவர் போற்றிப் புகழ்கி றார். அவரது இத்தகைய போக்கால் அவர் நேரில் நெதன் யாகுவோடு பேச்சுவார்த்தை நடத்தினால் பாலஸ்தீனத்தின் நோக்கங்களுக்கு அப்பாஸ் துரோகம் செய்துவிட்டார் என்பார்கள் பாலஸ்தீனர்கள். அத்தகைய அரசியல் சூழலைத்தான் பாலஸ்தீனத்த்தில் அப்பாஸ் உருவாக்கியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தாலும் பாலஸ்தீனர்க ளுக்கு இஸ்ரேல் மீதுள்ள எதிர்மறையான எண்ணத் தால் இஸ்ரேலுடன் ஏற்படும் சமாதான உடன்படிக்கை நடைமுறையில் சாத்தியப்படாது என்றுதான் கருதுவார்கள். ஆயுத மோதலுக்கு முடிவுகட்டுவதற்கான வாய்ப்புகளைக் கடந்த காலத்தில் அப்பாஸ் வீணடித்துவிட்டார். குறிப்பாக, 2008 சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது மேற்குக் கரையிலிருந்தும் கிழக்கு இஸ்ரேலின் அரபுப் பகுதிகளிலிருந்தும் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வும் பழைய நகரை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வைக்கவும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மெர்த் முன்வந்தார். அப்பாஸ் அதையும் வீணடித்தார். அப்பாஸ் தற்போதைய நிலைமைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துகிற ஒரு நேரடிப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமரோடு நடத்துவதற்கு அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

சுருக்கமாகத் தமிழில் : த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x