Published : 25 Apr 2019 11:22 AM
Last Updated : 25 Apr 2019 11:22 AM

இலங்கை குண்டுவெடிப்பு: நமது தலையாய கடமை என்ன?

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்தக் குண்டுவெடிப்பை இலங்கையில் நடத்தியதாகக் கூறப்படும் அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பல்ல. அது மட்டுமல்ல; இலங்கையில் முஸ்லிம்களே இந்த அமைப்பைத் தடைசெய்யக் கோரியும், அதன் உறுப்பினர்களைக் கைதுசெய்யக் கோரியும் தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அரசு, நிறுவனங்கள், மதச்சார்பானவர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் தலையாய கடமை ஒன்று இன்று இருக்கிறது. அது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கும், குறித்த சமூகத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியவைப்பதும், அவற்றை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதும்தான்.

- றியாஸ் குரானா, இலங்கை தமிழ் கவிஞர், ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’ நூலின் ஆசிரியர்

- முகநூல் பதிவில் இருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x