Published : 29 Sep 2014 10:40 AM
Last Updated : 29 Sep 2014 10:40 AM

மீண்டும் காமராஜர் ஆட்சி

‘ஆட்சியாளர்கள் எப்போதும் அப்படித்தான்' என்ற அ.கா.பெருமாள் எழுதிய கட்டுரையைப் படித்தேன்.

இறை அவதாரமான ராமனே செய்யத் தவறிய செயலை காமராஜர் செய்தார் என்றால், அவரைப் மனிதப் புனிதர் என்றே கருதத் தோன்றுகிறது.

காமராஜர் மக்கள் மனம் கவர்ந்தவராக வலம் வரக் காரணம், மக்கள் நலன் நாடியதே. முதலமைச்சர் என்றால் அருகில் செல்லவே முடியாது என்ற நடைமுறை வரக் காரணம், காமராஜர் போன்ற கண்ணியவான்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதே.

மக்களாட்சிக்கு மதிப்புக் கொடுக்காமல் மயக்கும் பேச்சுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டதன் விளைவே காமராஜர், கக்கன், ஜீவா போன்ற சுயநலம் இல்லாத தலைவர்கள் தோற்றதற்குக் காரணம்.

ஓட்டுக்குப் பணம் வாங்காமல் நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களித்து வெற்றி பெறச் செய்வோமானால் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x