Published : 08 Jan 2019 09:20 AM
Last Updated : 08 Jan 2019 09:20 AM

டெல்லியைப் பின்பற்றுமா சென்னை?

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வாகனப் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர களத்தில் இறங்கியிருக்கிறது கிழக்கு டெல்லி மாநகராட்சி.

வாகனம் நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்றோ இரண்டோ அல்ல... நான்கு மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு  ரூ.20 கட்டணம் விதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அது ரூ.80-ஆக அதிகரித்திருக்கிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.10  கட்டணம் இப்போது ரூ.40-ஆக அதிகரித்திருக்கிறது.

கிழக்கு டெல்லியை அடுத்து தெற்கு மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சிகளிலும் வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்கள் உயரும் எனத் தெரிகிறது.  இவ்விஷயத்தில் டெல்லியைப் பின்பற்ற சென்னை மாநகராட்சி முன்வரலாமே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x