Published : 01 Dec 2018 10:20 AM
Last Updated : 01 Dec 2018 10:20 AM

ரெட் ரிப்பன் உருவான கதை

1980-களில் அமெரிக்காவில் எய்ட்ஸ் உயிர்கொல்லி நோயால் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். நியூயார்கை சேர்ந்த நாடக கலைஞர் பேட்ரிக் ‘ஓ கேனால் இந் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது சக கலைஞர்களுடன் 1988-ல் விஷுவல் எய்ட்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி அரங்க நாடகங்களை நடத்தினார்.

இருப்பினும் பெரிய அளவிலான தாக்கத்தை இது ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், 1991-ல் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மார்க் ஹேப்பல் விஷுவல் எய்ட்ஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார்.  அப்போது அவர், பொதுவான ஒரு இலச்சினையை உருவாக்க யோசனை தெரிவித்தார்.

அப்போது வளைகுடா போர் நடந்துகொண்டிருந்த நேரம். வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நியூயார்க்கில் மரம் ஒன்றில் மஞ்சள் நிற நாடாக்கள் கட்டப்பட்டிருப்பதை மார்க் ஹேப்பல் பார்த்தார்.  இதேபோன்று எய்ட்ஸ்-க்கான இலச்சினையை ரிப்பனைக் கொண்டு உருவாக்க நினைத்தார். ரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தில் ரிப்பனை மடித்து அதன் ஒருபகுதியில் பின் போட்டு இணைத்து அதை அணிவது என்று விஷூவல் எய்ட்ஸ் குழு முடிவு செய்தது.

அதுபோலவே அணியத் தொடங்கினர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரிப்பன் இடம்பிடித்தது. இதை அணியும் போது ஏன் எதற்கு என்ற கேள்வியை பொது சமூகம் கேட்கும். அப்போது எய்ட்ஸ் குறித்த விவாதத்தை கிளப்பும் என நம்பினார் இதை வடிவமைத்த மார்க் ஹேப்பல். அதுபோலவே ஆனது. மக்கள் எய்ட்ஸ் குறித்து பேசத் தொடங்கினர்.

1992-ஐ  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ரிப்பனுக்கான ஆண்டாக அறிவித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் தேசிய எய்ட்ஸ் கொள்கையை வரையறுத்தார்.  எய்ட்ஸ் குறித்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.  எச்ஐவி குறித்த படிப்புகளுக்கு அரசு நிதி ஒதுக்கியது. மிகப்பெரிய எய்ட்ஸை வெல்ல  ஒரு சிறிய ஆயுதாமாக ரிப்பன் மாறியது.

பின்னர் உலகம் முழுவதும் எய்ட்ஸைப் போலவே அதை எதிர்க்கும் ஆயுதமாக ரெட் ரிப்பனும் பரவியது. ஆனால் ரெட் ரிப்பனை உலகுக்கு அளித்த மார்க் ஹேப்பலைப் பற்றிதான் யாருக்கும் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x