

சிறார்களுக்காக நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய தங்கமணி சென்னையில் 1925இல் பிறந்தவர். தந்தை வாடாவூர் மு.தங்கவேலர், சென்னை துறைமுகப் பகுதியில் தானியக்கிடங்கில் பணியாற்றி வந்தார். தாயார் பெயர் புதுவை சூடாமணி அம்மாள். தங்கமணி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் படிக்கும் அனைவரும் வியக்கும் வண்ணம் அறிவியல் நூல்கள், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு என அனைத்து வகையான படைப்புகளையும் இவர் எழுதிக் குவித்துள்ளார்.
சென்னை துறைமுகப் பகுதியில் பிரிட்டிஷார் காலத்தில் உருவான பிளாக் டவுன் என்றழைக்கப்பட்ட ‘கரியமால்நகர்’ என்ற பகுதியில் இவர் வசித்துவந்தார். தற்போது இப்பகுதி கார்ப்பரேஷன் லைன் என்று அழைக்கப்படுகிறது.