

தமிழ்நாட்டில் திருநங்கையர் உரிமைகள் சார்ந்த வரலாறு, முடிவடையாத போராட்டங்கள் நிரம்பியது. இந்தியாவின் முதல் திருநங்கை நல வாரியம் 2008இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு, திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள், நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் நால்ஸா (NALSA) தீர்ப்பை (2014) பின்பற்றிக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீட்டு நன்மைகளை வழங்குவதற்காக, 2015இல் தமிழ்நாடு அரசு, திருநங்கைகளை ‘மிகவும் பின்தங்கிய வகுப்பின’ராக வகைப்படுத்தியது.