

உலகின் முன்னணி பதிப்பகங்களையும், வாசகர்களையும் ஒன்றிணைக்கும் அறிவுக் கொண்டாட்டமாக சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி உருவெடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, 1982ஆம் ஆண்டு தொடங்கி, இன்று உலகின் முன்னணி மூன்றாவது பெரிய புத்தகக் கண்காட்சியாக வளர்ந்துள்ளது.
இந்த ஆண்டு 44-வது புத்தகக் காட்சி,நவம்பர் 5 முதல் 16 வரை பிரமாண்டமான ஏழு காட்சிக் கூடங்களில் நடைபெறுகிறது. 118 நாடுகளைச் சேர்ந்த 2350 பதிப்பகங்கள் சார்பில் 20 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் அறிவுத் திருவிழாவில், தமிழ் இலக்கியமும், பதிப்புத் துறையும் இப்போதுதான் அழுத்தமாக வேர்விடத் தொடங்கியுள்ளன.