

தமிழ்நாட்டில் தொடர்ந்து முயற்சி எடுத்து, எழுத்து, விமர்சனங்கள் மூலம் கல்வித் திட்டத்தில் மாற்றங்களை முன்மொழிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன். இளம் வாசகர்களுக்கு ஏராளமான புனைவு, அபுனைவு நூல்களை எழுதிவரும் அவருடன் ஓர் உரையாடல்...
கல்வியில் எந்த அளவுக்கு மாற்றம் சாத்தியமாகி இருப்பதாக நினைக்கிறீர்கள்? - 1990களில் கல்வியானது மாற்ற முடியாத நிரந்தர அம்சங்களைக் கொண்டுள்ளதாக நம்பினோம். கடும் போராட்டங்கள், பொது விவாதங்கள், அரசியல்ரீதியிலான அழுத்தங்களின் மூலம் அதை மாற்ற முடிந்தது.