பகவதி மலையின் தொல்லெச்சங்கள்

பகவதி மலையின் தொல்லெச்சங்கள்
Updated on
2 min read

எழு​பதுகளில் வேலூரில் பணி​யாற்​றிக்​கொண்​டிருந்த போது, அந்​தப் பகு​தியி​லிருந்த மலைகளில் ஏறிச் சுற்​றித் திரிவது எனக்கு பிடித்​த​மான பொழுது​போக்​கு. புதி​தாக வாங்​கி​யிருந்த பைக்​கும் என் மனைவி எனக்கு பரி​சாகக் கொடுத்த பெண்​டாக்ஸ் காமி​ரா​வும் தூண்டு விசைகளாக அமைந்​தன.
வேலூரில் வேலப்​பாடி என்ற பகு​தி​யில் உள்ள பகவதி மலை எனக்​குப் பிடித்த ஓர் இடம். சுமார் முந்​நூறு மீட்​டர் உயரம்​தான். படிகளும், ஒற்​றையடிப்​பாதை​யும் உண்​டு. எளி​தாக ஏறி விடலாம். உச்​சி​யில் பல தொல்​லியல் எச்​சங்​கள் உண்​டு. அவை​களில் இரண்டை சிறப்​பாக நான் குறிப்​பிட விரும்​பு​கின்​றேன். ஒன்​று, பாறை​யில் செதுக்​கப்​பட்ட சமணசின்​ன​மான இரு பாதங்​கள். இரண்​டாவது, ஒருபாறை​யில் பொறிக்​கப்​பட்​டுள்ள ராஷ்ட்​டிரகூட மன்​னன் மூன்​றாம் கிருஷ்ணன் காலத்து கல்​வெட்​டு.

இம்​மலை​யிலுள்ள தொல்​லியல் எச்​சங்​களில் பழமை​யானது சமணம் சார்ந்​தது. ஓர் இயற்​கை​யான குகை​யினுள் இரு பாறைப் படுக்​கைகள் செதுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தின் பல மலைகளில் நாம் காணக்​கூடிய இரு பாதங்​கள் – ஸ்ரீபாதம் – இங்கே உள்​ளன. இவை சமணத் துறவி​கள் இங்கு இருந்​ததற்​கான அடை​யாளம். கன்​னி​யாகுமரி விவே​கானந்​தர் பாறை​யிலும் இரு கற்​பாதங்​கள் இருந்​த​தாகக் குறிப்​பு​கள் உண்​டு. அதே​போல இங்கு பாறை​யில் செதுக்​கப்​பட்​டிருக்​கும் படிகளும் அந்த இடத்​தில் துறவி​கள் இருந்​ததற்கு அடை​யாளம். இந்த தொல்​லியல் எச்​சங்​கள் கி.பி. இரண்​டாம் நூற்​றாண்​டைச் சேர்ந்​தவை என்று கணிக்​கப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in