

சிதம்பரம் போகாமல் இருப்பேனோ - என் ஜென்மத்தை வீணாக்கி கெடுப்பேனோ?
நாடறிந்த நந்தனாரின் இந்தப் பாடலின் ஏக்கத்தையும் இயலாமையையும் கேட்டு உருகாதார் உண்டோ? நந்தனாகவே அமெரிக்கா சென்று நந்தன் கதையை அமெரிக்காவில் அரங்கேற்றி திரும்பி இருக்கிறார் திருபுவனம் ஆத்மநாதன். நல்ல சாரீர வளமும் நடிப்பாற்றலும் இயற்கையாகவே ஆத்மநாதனுக்கு வாய்த்திருக்கிறது.