

ஆணவக்கொலைகளைத் தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்படும் ஆணையம் அளிக்கிற பரிந்துரைகளின் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும் எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவொன்றில், இந்தியாவில் 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் முறையே 25, 33, 18 ஆணவக்கொலைகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காலக்கட்டங்களில் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் ஏதும் பதிவானதாகச் சொல்லப்படவில்லை.