

ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் நோபல் பரிசுகள் மனித அறிவின் உச்சத்தைக் கௌரவிக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மனித குலம் எதிர்நோக்கும் சிக்கல்களை விளக்கி, தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் சிந்தனைகளை அங்கீகரிக்கிறது.
2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அமெரிக்காவின் ஜோயல் மோகிர், கனடாவைச் சேர்ந்த பீட்டர் ஹோவிட், பிரான்ஸை சேர்ந்த பிலிப் அக்யோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆய்வுகள் தொழில்நுட்பம், புதுமை, மனித முயற்சி ஆகியவை நீடித்த பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.