

பிரிட்டிஷ் - இந்தியாவில், தீபாவளியை ஆதரித்தும் எதிர்த்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடுக்கப்பட்டோரும், சுதேசியவாதிகளும் பிரிட்டிஷ் - இந்தியாவில் விவாதித்தனர். அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை, பெண் விடுதலை, சுயமரியாதை, சுதேசி இயக்கங்களும் உலகப் போர்களும் பெரும் போர்க் களமாக்கியதால் வெடிச்சத்தங்கள் ஒலித்தன.
பலவித நரகாசுரர்கள்: திராவிடக் கருத்தியலின் முன்னோடியான அயோத்திதாசர் திராவிடரான நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவதைப் பெளத்தப் பண்டிகை என்று ‘தமிழன்’ இதழில் 1907 நவம்பர் 13இல் எழுதிய, ‘தீபாவளிப் பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டார்.