

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த காசா போர், ஒருவழியாக முற்றுப்பெற்றிருக்கிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேலுக்கும் காசாவை ஆட்சிசெய்யும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான இந்தப் போர் நிறுத்தம், இதுவரை பெரும் இழப்புகளைச் சந்தித்த காசாவுக்கு நிரந்தரத் தீர்வை அளிக்குமா என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
2023 அக்டோபர் 7இல் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது.