

தொழில் துறை வளர்ச்சியும் அதன் விளைவாக நிகழும் தொழிலாளர் புலம்பெயர்தலும் சமகால இந்தியாவின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.
அதிலும், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தொழிலாளர் புலம்பெயர்வு என்பது சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை, போதிய வாய்ப்புகள் இல்லாத நிலை ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் சிக்கல் நிறைந்த சமூகப் பொருளாதார இயங்குமுறையில் (Socio-Economic Dynamic) மிக ஆழமாக இணைக்கப்பட்டு இருக்கிறது.