

காஸா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், பட்டினியால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துவருவதும் நிவாரண உதவிகள்கூடக் கிடைக்கவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஈடுபடுவதும் மிகுந்த வேதனையளிக்கின்றன. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க மேற்கத்திய நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில், காஸாவின் கண்ணீர் துடைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் இஸ்ரேல் அரசு, அதைவிடவும் பல மடங்கு கொடூரமான தாக்குதல்களை காஸா மக்கள் மீது நிகழ்த்திவருகிறது. உணவு, குடிநீர் கிடைக்காமல் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர்.