Published : 28 Aug 2014 08:43 AM
Last Updated : 28 Aug 2014 08:43 AM

ஸ்டேட்டின்: எபோலாவுக்கான மருந்தா?

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் ‘எபோலா' கொள்ளை நோய்க்கு இப்போது பரிசோதனை நிலையில் இருக்கும் மருந்துகளைக்கூடக் கொடுத்துப் பார்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துவிட்டது.

மிகச் சரியான முடிவுதான் இது. எபோலாவுக்குத் தருவதற்கென்று சோதித்து உறுதி செய்யப்பட்ட தடுப்பு ஊசி மருந்துகளோ, சிகிச்சை முறைகளோ இல்லை. நோய் பரவிவரும் வேகத்தைக் கட்டுப் படுத்த, பிராணிகளுக்கு மட்டுமே கொடுத்து சோதிக் கப்பட்ட மருந்துகளைத் தருவதுதான் இப்போது உள்ள ஒரே வழி. இந்த மருந்துகளும் போதிய அளவுக்குக் கைவசம் இல்லை என்பது மற்றொரு பிரச்சினை.

இசட்மேப்

‘இசட்மேப்' என்ற அந்த சோதனை மருந்தைத் தான் இரண்டு அமெரிக்கர்களுக்குக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியிருக்கின்றனர். எவ்வளவு தான் முயன்றாலும் இந்த மருந்தையும் குறுகிய காலத்தில் அதிக அளவில் தயாரித்து நிறையப் பேரைக் காப்பாற்றிவிட முடியாது. அப்படியானால் வேறு ஏதாவது மருந்து இருக்கிறதா?

இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தடுப்பதற்கான மருந்துகள் ஓரளவுக்கு உதவிடக்கூடும். எபோலாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், ரத்தத்தில் விஷம் கலந்த நோயாளிகளுக்குமிடையில், முதல் பார்வையிலேயே தெரியும் சில ஒற்றுமைகளை மருத்துவர்கள் பதிவுசெய்துள்ளனர். எபோலா நோயாளியின் உடல் முழுவதும் பரவியுள்ள ரத்தக்குழாயில் இருக்கும் செல்அடுக்குகளில் கடுமையான செயலிழப்பு ஏற்படுவதை அப்போது கண்டுபிடித்துள்ளனர். இதனால் ரத்தம் கெட ஆரம்பிக்கிறது. கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படுகிறது. நிமோனியா, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் ஆகியவற்றால் பீடிக்கப்படும் நோயாளி களுக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது.

தயக்கம் வேண்டாம்

இதய நோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்குத் தரும் மருந்து, மாத்திரைகள் மூலம் இத்தகைய நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். நோய்த் தொற்றி னால் பாதிக்கப்பட்ட உடலுக்கு வலு வேற்றவும் இந்த மருந்துகளால் முடிந்தது. நோய்த்தொற்றைத் தடுக்கவோ அகற்றவோ முடியா விட்டாலும் உள் ளுறுப்புகள் பாதிப்படைந்து செயலிழப்பதைத் தடுக்க முடிந்தது. ரத்தத்தில் விஷம் கலந்த நோயாளி களுக்கு இந்த முறையில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியது பற்றி 2012-ல் ‘கிரிடிகல் கேர்' என்ற மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எபோலாவுக்குத் தரும் சோதனை மருந்தைப் போல அல்லாமல் இதய நோய்க்கும் நீரிழிவுக்கும் தரப்படும் மருந்துகள் நன்கு சோதித்துச் சான்று ரைக்கப்பட்டவை. அத்துடன் மூலப் பெயரிலேயே விற்கப்படுகின்றன. விலையும் மலிவானது. சாதாரண மருத்துவமனைகளில்கூட இந்த மருந்து கள் உள்ளன. எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே இவை தாராளமாகக் கிடைக்கின்றன.

ஆனால், உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தவர் களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதில் தயக்கம் இருக்கிறது. இந்த மருந்துகள் வைரஸ்களைப் பெருக்கி, நோயை மேலும் தீவிரப் படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், வைரஸ்கள் பெருகுவதை ஸ்டேட்டின் மருந்துகள் குறைத்திருப்பதாகத்தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாங்கள் தெரிவிக்கும் யோசனை களில் ஆபத்து இல்லை என்று கூறவில்லை. அதே சமயம், மருத்துவர்கள் இந்த மருந்துகளையும் பயன்படுத்தி, எபோலாவால் தாக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாமே என்றுதான் கருது கிறோம்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறோம். வயிற்றுப்போக்கு ஏற்படும் நோயாளிகளுக்கு உப்பு-சர்க்கரைக் கரைசலைக் கொடுப்பதைப்போல எதிர்காலத்தில் ஸ்டேட்டின்களைக் கொடுக்கலாம் என்று கருதுகிறோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு தொற்றுநோய் பரவும்போது எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், சர்வதேச அளவில் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்த இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x