காமராஜர்: சாதனைகள் படைத்த சாமானியர்

காமராஜர்: சாதனைகள் படைத்த சாமானியர்

Published on

காமராஜர் பற்றி எவ்வளவு பேசினாலும், எத்தனை முறை பேசினாலும் தீராது. பல வெற்றிகளைச் சுவைத்தவர் அவர். இந்தியாவின் தென்கோடியில் அன்றைய ‘விருதுப்பட்டி’ என்னும் விருதுநகரில் இருந்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள ‘ஜந்தர் மந்தர்’ வரை சென்று, இந்தியக் குடியரசின் நிலைப்பாட்டுக்கு உதவியதை, காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாகக் கூறலாம். படிப்பறிவின்றி, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக இளவயது வாழ்வைத் தொடங்கிய காமராஜர் - மிகவும் சாதாரணமானவர்.

அரசியல் வெற்றிகள்: 1920இல் காந்தி​யடிகள் தலைமையில் அகிம்சை வழியில் நடந்த அனைத்துப் போராட்​டங்​களிலும் கலந்து​கொண்டு 10 ஆண்டு​களுக்கும் மேலாகச் சிறை வாழ்வை அனுபவித்தவர் காமராஜர். கட்சியின் கட்டுப்​பாட்டுக்கும் சட்டதிட்டங்​களுக்கும் அடங்கி, கட்சியைப் பாதுகாத்​தார். நாட்டுக்​காகச் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in