

வாழ்வின் பாதையை அதிர்ஷ்டமே முடிவு செய்கிறது எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் சிலர் அதிர்ஷ்டத்தை நம்பாமல் தனது அயாராத உழைப்பால், பிடிவாதமான முயற்சியால், நேர்மையான செயல்களால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறார்கள். அதனைச் சாதித்தும் காட்டுகிறார்கள். அப்படி ஒரு பெண் கதாபாத்திரத்தை ‘அக்கினி சாட்சி’ நாவலில் லலிதாம்பிகா அந்தர்ஜனம் உருவாக்கியுள்ளார்.
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்த மலையாள நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் மொழியாக்கம் செய்திருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கேரளாவின் நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனம், ஒடுக்குமுறைகள், சாதி வேற்றுமை, சடங்குகள் பற்றி அந்தர்ஜனம் மிகவும் யதார்த்தமாக நாவலில் விவரித்துள்ளார்.