மக்களவைத் துணை சபாநாயகர் பதவி என்றைக்குத்தான் நிரப்பப்படும்?

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி என்றைக்குத்தான் நிரப்பப்படும்?
Updated on
3 min read

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி கடந்த ஆறு ஆண்டுகளாகக் காலியாக இருப்பது, அரசியல் விவகாரங்களில் தீவிரமாகக் களமாடுபவர்களின் கவனத்துக்கே வராமல் இருக்கிறது. உண்மையில், நாடாளுமன்ற அமைப்பில் மிக முக்கியமான ஒரு பதவி, இத்தனை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் அடிப்படையிலும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலும் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

அரசமைப்பு என்ன சொல்கிறது? - அரசமைப்புச் சட்டத்தின் 93ஆவது கூறின்படி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கூடும் முதல் நாடாளு​மன்றக் கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார். அடுத்த சில நாள்களில் துணை சபாநாயகர் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார். தோழமைக் கட்சியைச் சேர்ந்​தவர்​களும் துணை சபாநாயக​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருக்​கிறார்கள். எதிர்க்​கட்சி உறுப்​பினரைத் துணை சபாநாயக​ராகத் தேர்ந்​தெடுக்கும் நடைமுறையும் இருந்​திருக்​கிறது. துணை சபாநாயகர் பதவி என்பது ஒரு சம்பிர​தாயமான பதவி அல்ல. துணை சபாநாயகர் கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் அறிவுறுத்​தி​யிருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in