ஜனநாயக வேர்களில் மாற்றுத்திறனாளிகள்

ஜனநாயக வேர்களில் மாற்றுத்திறனாளிகள்

Published on

தமிழ்நாடு சமூக நீதியின் தொட்டில் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இயங்கும் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது சமூக நீதியின் நீட்சி என்றே சொல்ல வேண்டும்.

சமூக நீதி வரலாறு: ஏற்கெனவே மாற்றுத்​திற​னாளி​களுக்கு அரசின் கல்வி, வேலைவாய்ப்பு​களில் 4% இடஒதுக்கீடு வழங்கப்​பட்டுவந்தா​லும், அது மட்டுமே நிரந்தரத் தீர்வு அல்ல. பாதிக்​கப்பட்ட சமூகங்​களின் எதிர்கால முன்னேற்​றத்​துக்குக் கோரிக்கைகளும் தீர்வு​களும் அவர்களிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். மாற்றுத்​திற​னாளி​களுக்கு உள்ளாட்​சிகளில் இடஒதுக்கீடு குறித்து இளைஞர் நலன் - விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்​றத்தில் தனது முதல் ​பேச்சில் பேசியிருந்​தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in