குழந்தைகள் பாதுகாப்பு: அரசின் பொறுப்பு என்ன?

குழந்தைகள் பாதுகாப்பு: அரசின் பொறுப்பு என்ன?

Published on

இந்தியாவின் நாளைய சமூகமே குழந்தைகளும் இளைஞர்களும்தான். ஆனால், நாட்டின் எதிர்காலமான அவர்களில் பலரின் நிகழ்காலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுதான் சமகாலப் பெரும் அவலம். தற்போதைய சமூகக் கட்டமைப்பில் குழந்தை வளர்ப்பிடமாகக் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால், பல குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவ்வாறான சூழ்நிலைகளால் குழந்தைகளின் உடல்நலன், மனம், கல்வி, முன்னேற்றம் ஆகியவை பின்தங்கியிருப்பதை உணரலாம். இது ஒரு நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் அவலச் சூழல்.

​பாது​காப்​பின்​மையால் நிகழ்ந்த திருமணம்: ராணிப்​பேட்டை மாவட்​டத்தின் அமராபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நிலையை உதாரண​மாகச் சொல்லலாம். அக்குடும்பத்தின் தலைவர் மாற்றுத்​திற​னாளி. மூன்றாண்​டு​களுக்கு முன் அவர் குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது தவறி விழுந்து இறந்து​விட்​டார். அதன் பின்னர், கூலி வேலை செய்து தன் குழந்தை​களைக் காப்பாற்றி வந்தார் அவரது மனைவி. அவரும் சமைப்​ப​தற்கான காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்​த​தால், இடுப்​புக்குக் கீழான அவரது இயக்கம் முடங்கி​விட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in