Published : 01 Jun 2018 09:43 AM
Last Updated : 01 Jun 2018 09:43 AM

மீண்டும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’

திராவிட இயக்கத்தின் முத்தருணங்களையொட்டி ‘இந்து தமிழ்’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூல் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு, அடுத்து திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சி நிறைவு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி நிறைவு இந்த மூன்று முக்கியமான நிகழ்வுகளையும் ஒன்றுசேரக் குறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட நூல் இது.

நவீன இந்தியாவின் முக்கியமான அரசியல் இயக்கங்களில் ஒன்றான திராவிட இயக்கம் கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்றைய தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்நூல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்தைக்கு வந்திருக்கிறது. ஏற்கெனவே நான்கு பதிப்புகளைக் கண்ட நூல் இது.

‘கருணாநிதியின் பிறந்த நாள் தருணத்தில் இந்தப் புத்தகம் வேண்டும்’ என்று வாசகர்கள் பலரும் வலியுறுத்திவந்த நிலை யில் ஐந்தாவது பதிப்பு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூரில் ஜூன் 1 அன்று, திமுக பொதுக்கூட்ட அரங்கிலும், ஜூன் 3 அன்று சென்னை அறிவாலயத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

புத்தகத்தின் விலை ரூ.220. புத்தகத்தை அஞ்சலில் பெற அஞ்சல் செலவு ரூ.40 சேர்த்து, ரூ.260-க்கு KSL MEDIA LIMITED என்ற பெயரில் டிடி அல்லது செக் அனுப்பலாம். முகவரி: ‘தி இந்து தமிழ் நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. புத்தக விற்பனையாளர்கள் 044-30899000, 7401296562 எனும் எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x