Published : 26 Jun 2018 09:19 AM
Last Updated : 26 Jun 2018 09:19 AM

பிட்ஸ்: புதிய ஒளிச்சேர்க்கை

புதிய ஒளிச்சேர்க்கை

லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள், தாவரங்களில் கட்புலனாகும் ஒளிக்குப் பதிலாக கிட்டத்தட்ட அகச்சிவப்பு போன்ற ஒளியைப் பயன்படுத்தும் புதிய வகை ஒளிச்சேர்க்கையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தாவரவியல் உலகில் முக்கியக் கண்டுபிடிப்பு.

சகலம் காவிமயம்

உத்தர பிரதேச அரசு அலுவலகக் கட்டிடங்களை காவி வண்ணத்துக்கு மாற்றிவருகிறது யோகி அரசு. சமீபத்திய வண்ணமடிப்பு முஸாஃபர் நகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிக்கு நடந்தது. லக்னோவின் ஹஜ் அலுவலகச் சுவரும் விதிவிலக்கில்லை.

அஞ்சாத அதிபர்

பிரச்சாரத்தின்போது குண்டுவெடிப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மங்க்வாங்வா. “நூலிழையில் தப்பித்தேன். கொலை முயற்சியில் தப்புவது எனக்குப் பழகிவிட்டது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x