Published : 27 Jun 2018 09:08 AM
Last Updated : 27 Jun 2018 09:08 AM

வங்கத்தில் வலுப்பெறும் பாஜக

வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்ததிலிருந்து பாஜக பெரும் உற்சாகத்துடன் இருக்கிறது. மொத்தம் உள்ள 58,000 இடங்களில், திரிணமூல் காங்கிரஸ் 21,110 இடங்களில் வென்றதன் மூலம் தன்னை அசைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் மம்தா. அடுத்த இடத்திலிருந்து மார்க்ஸிஸ்ட் கட்சியினர் சரிய பாஜக முன்னேறுகிறது. மார்க்ஸிஸ்ட்டுகள் 1,708 இடங்களிலும் காங்கிரஸ் 1,062 இடங்களிலும் வெல்ல பாஜக 5,747 இடங்களில் வென்றிருக்கிறது. மாநிலம் முழுவதும் 18% வாக்குகளைப் பெற்று திரிணமூல் காங்கிரஸுக்கு முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக. இடதுசாரிக் கட்சிகள் 4.5% வாக்குகள், காங்கிரஸ் 3.3% வாக்குகள் என்று பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. 2013-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வெறும் 18% இடங்களில் மட்டும் போட்டியிட்ட பாஜக, இந்த ஆண்டு 48% இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக வென்றிருக்கும் பல தொகுதிகள் முன்பு மார்க்ஸிஸ்ட்டுகளிடம் இருந்தவை என்பதுதான் இடதுசாரிகளை மேலும் கலக்கம் அடைய வைத்திருக்கும் செய்தி. வரும் மக்களவைத் தேர்தலில் வங்கத்தின் 42 தொகுதிகளில் குறைந்தது 22-ஐ வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார் அமித் ஷா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x