Published : 19 Apr 2018 10:18 AM
Last Updated : 19 Apr 2018 10:18 AM

இப்படிக்கு இவர்கள்: நினைவுகள் கரையாது!

அ. ஜெய்னுலாப்தீன்,

சென்னை- 83.

நினைவுகள்

கரையாது!

வெ

.இறையன்பு எழுதிவரும் ‘காற்றில் கரையாத நினைவுகள்!’ தொடர் பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது. சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் அனுபவங்களை அவர் எழுதியிருக்கும் விதம், நான் பிறந்த ஊரான சின்னமனூருக்கே (1950 - 1960க்கு) அழைத்துச் சென்றுவிட்டது. எங்கள் ஊர்ச் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள் என்றால், அதன் பெருமை கனி சைக்கிள் கடைக்கும், திவான் சைக்கிள் கடைக்கும்தான் சேரும். கீழே விழுந்து முழங்காலில் சிராய்ப்பு ஏற்படாமலும், குரங்குப் பெடல், அரைப் பெடல் போடாமலும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டவர்கள் யாருமில்லை. கற்றுத்தருபவர் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே பின்னால் வருகிறார் என்ற நம்பிக்கையில் தைரியமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்க, அவர்கள் சைக்கிளை விட்டுவிட்டார்கள் என்பதை அறிந்தவுடன், பதற்றமடைந்து, தாறுமாறாக ஓட்டி விழுந்து அடிபட்டதை எல்லாம் ரசனையோடு விவரித்திருக்கிறார் இறையன்பு.

ஜீவன் பி.கே., கும்பகோணம்.

அதிசய நாரை ஜோடி!

லக மசாலா பகுதியில், கடந்த 16 ஆண்டுகளாக ஒரு ஆண் நாரை தன் இணைக்காக ஆண்டுதோறும் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பறந்துசென்று இணையுடன் வாழ்ந்து, மீண்டும் தன் இருப்பிடத்துக்குத் தன் குஞ்சுகளுடன் திரும்புகிறது எனும் செய்தியைப் படித்து வியந்தேன். துணையைப் பிரியும் பெண் நாரை 3 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் அமர்ந்திருப்பது மற்றொரு அதிசயம். குரேஷியாவைச் சேர்ந்த 71 வயதான ஸ்டெஜ்பன் வோகிக், இந்தப் பெண் நாரையைக் காப்பாற்றி வளர்த்து, 14 ஆண்டுகளில் 62 குஞ்சுகளைப் பராமரித்து வருவது போற்றுதற்குரியதே!

ம.மீனாட்சிசுந்தரம், சென்னை.

பாராட்டுக்குரிய இளைஞர்கள்

ரு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்கள் சொந்த கிராமத்துக்கு இவற்றைச் செய்துகொடுக்கும் இளைஞர்கள் போற்றுதலுக்குரியவர்கள். ‘கிராம முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம்' என்று சொன்ன காந்தியின் குரலுக்கு உயிர் கொடுக்கும் சீரிய பணியைத் தொடங்கியிருக்கும் சில்லக்குடி இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற அடிப்படை வசதிகளற்ற கிராமங்களை முன்னேற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்.

ஆறுமுகம் சேதுராமன், தென்மாப்பட்டு.

டோல்கேட் வசூல்!

சி

வகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து கீழ்ச்செவல்பட்டி வரை சாலையின் இருபக்கமும் இருந்த மரங்களை நான்குவழிச் சாலை என்ற பெயரில் வெட்டிவிட்டனர். ஒரு பக்கம் மரம் வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, மரங்களை அழித்தது எந்த விதத்தில் நியாயம்? இதை நீதிமன்றங்களும் தட்டிக்கேட்பதில்லை. அந்தச் சாலைகளில் மரம் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால். இன்றுவரை டோல்கேட் பணம் வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x