Published : 05 Jan 2018 05:40 PM
Last Updated : 05 Jan 2018 05:40 PM

2017: மறக்க முடியுமா? - தேசிய நிகழ்வுகள்

ஜனவரி

ஜன. 1: சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து முலாயம் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய தலைவராக அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்டார்.

ஜன. 2: சாதி, மத அடையாளங்களை வைத்து தேர்தலில் ஓட்டுக் கேட்பது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

ஜன. 13: மாஞ்சா நூலுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

ஜன. 15: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1jpg

ஜன. 18: மான்களை வேட்டையாடத் துப்பாக்கி வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

ஜன. 26: மேகாலயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குப் புகார் கடிதம் அனுப்பிய நிலையில் அம்மாநில ஆளுநர் வி. சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்தார். மேகாலயாவின் ஆளுநராக இருந்த அதே நேரத்தில் மே 2015 முதல் ஜனவரி 2017 வரை அவர் அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநராகவும் பொறுப்புவகித்தார்.

பிப்ரவரி

பிப். 1: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டது. ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கூட்டத்தொடரின்போது மாரடைப்பு ஏற்பட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள எம்.பி.யுமான இ.முகமது மரணமடைந்தார்.

பிப். 2.: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியது.தால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர

பிப். 3: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டாத வருவாய் ரூ.5,400 கோடி சிக்கியதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பிப். 5: கறுப்புப் பணம் வங்கி சேமிப்பில் போடப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஒரு கோடி வங்கி கணக்குகளைச் சோதனைக்குட்படுத்தியது வருமான வரித் துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டனர்.

பிப். 15: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 104 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி – 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது இஸ்ரோ.

பிப். 27: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, நீட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 41 பக்க மனுவைச் சமர்ப்பித்தார்.

மார்ச்

மார்ச் 6: பாபர் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக பாஜகவின் தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

# மத்திய அமைச்சரும் சபாநாயகருமான ரபி ராய் 91 வயதில் கட்டாக்கில் காலமானார். காந்தியவாதி, சோசலிஸ்ட் என்ற பல பரிணாமங்களைக் கொண்ட இவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மார்ச் 9: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர

மார்ச் 11: ஆயுதத் தடைச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி (பி.ஆர்.ஜே.ஏ.) கட்சியைத் தொடங்கினார். சட்டபேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

மார்ச். 18: இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தந்தை தேவராஜ் சிக்கா 85-வது வயதில் காலமானார். பருவ மழையைக் கணிக்க பல்வேறு நுணுக்கங்களை உருவாக்கியவர் இவர்.

மார்ச். 22: உ.பி.யில் மாட்டிறைச்சி விற்பனைக் கூடங்களை மூட முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

மார்ச். 26: பெண்ணிடம் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டால் கேரளப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் ராஜினாமா செய்தார்.  

7 மாநிலத் தேர்தல்

கடந்தாண்டு மொத்தம் 7 மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்தாண்டின் தொடக்கத்தில் நடந்தது. பஞ்சாப் (பிப்ரவரி 4), கோவா (பிப்ரவரி 4), உத்தரகண்ட் (பிப்ரவரி 15) ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் வரை உத்தரப்பிரதேசத்தில் (பிப்ரவரி 11, 15, 19, 23,27 மற்றும் மார்ச் 4,8) 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்துக்கு மார்ச் 4, மார்ச் 8 தேதிகளில் இரு கட்டங்களாகவும் நடைபெற்றன.

ஐந்து மாநிலத் தேர்தல் வாக்குகள் மார்ச் 11-ல் எண்ணப்பட்டன. குஜராத்தில் 403 தொகுதிகள் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையாக 312 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்தது. 1991-ல் பா.ஜ.க. முதன் முதலாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைத்தபோது 221 தொகுதிகளையே கைப்பற்றியிருந்தது. உத்தரகண்ட்டிலும் 71 தொகுதிகளில் 51-ல் பா.ஜ.க. வெற்றிபெற்றது.

பஞ்சாபில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூரிலும் கோவாவிலும் காங்கிரஸ், பா.ஜ.க.வைவிட சில தொகுதிகள் அதிகம் பெற்றிருந்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியமைந்தது. 182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தல் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது.

இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 9-ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இரு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ல் நடந்தது. குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இமாச்சாலப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.விடம் ஆட்சியை இழந்துள்ளது.

ஏப்ரல்

ஏப். 1: பி.எஸ். 3 (Bharat Stage III BS III) தொழில்நுட்பம் கொண்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட 394 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

right

ஏப். 8: டெல்லியில் ரிசர்வ் வங்கியை நோக்கிச் சென்ற தமிழக விவசாயிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தடியடி நடத்தினர். போராட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் காவலில் வைக்கப்பட்டனர்.

ஏப்.11: இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

ஏப். 25: போலி கடவுச்சீட்டு வழக்கில் ரவுடி சோட்டா ராஜனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஏப். 19: ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கிய விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

ஏப். 28: தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ஹவாலா தரகர் நந்துசிங் கைதுசெய்யப்பட்டார்.

5jpg

மே

மே 1: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எவரும் காரில் சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

மே 4: இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான ‘ஸ்வச் சர்வேக்ஷன் 2017’ கருத்துக் கணிப்பில், முதல் இடத்தை இந்தூர் நகரம் பிடித்தது.

மே 5: டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்று இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற அந்தஸ்தையடைந்த லீலா சேத் 86-வது வயதில் காலமானார். நிர்பயா வழக்கையொட்டி சட்டத் திருத்தத்துக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா குழுவில் இவர் ஓர் உறுப்பினர்.

# இந்தியா ‘தெற்காசிய’ செயற்கைக்கோளான ‘ஜிசாட்-9’ சதிஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மே 8: இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தொடங்கப்பட்டது.

மே 16: ரூ.1000 கோடி பினாமி சொத்து விவகாரத்தில் லாலு பிரசாத் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மே 22: எவரெஸ்ட் சிகரத்தை நான்கு முறை தொட்ட பெண் என்ற சாதனையைப் படைத்தார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா (Anshu Jamsenpa).

மே 26: இறைச்சிக்காகக் கால்நடைச் சந்தைகளில் மாடுகளை விற்கத் தடை வித்தது மத்திய அரசு. அசாம்-அருணாசலப்பிரதேசம் இடையே லோஹித் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் மீக நீளமான (9.15 கி.மீ.) ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

1jpg100 

ஜூன்

ஜூன் 8: மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கத் தடைவிதிக்கப்பட்டதை மீறி அம்மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஜூன் 12: ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு மாடுகளை ஏற்றிவந்த லாரிகளில் ஒன்றைப் பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் தீவைத்துக் கொளுத்தினர்.

ஜூன் 16: முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி என் பகவதி 95-வது வயதில் மறைந்தார். பொது நல வழக்கு மனுக்களை அறிமுகம் செய்தவர் இவர்.

ஜூன் 24: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான பயிர்க் கடனை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

# ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

# தவறான தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்த மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை மூன்றாண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்தது தேர்தல் கமிஷன்.

ஜூன் 28: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அறிவிக்கப்பட்ட படிகளை உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

நீதிமன்றத் தீர்ப்புகள்

2jpg100 

# செப்டம்பர் 20: மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் எஸ்.ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 லட்சத்து 32 ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம். சிறார் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் குற்றவாளிக்கு இவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. 

# ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோர்களான ராஜேஷ்  தல்வார், நுபுர் தல்வார் ஆகிய இருவருக்கும் காசியாபாத் சி.பி.ஜ. நீதிமன்றம் 2013-ல் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அக்டோபர் 13-ல் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என கூறி, தால்வார் தம்பதிகளை விடுவித்து  உத்தரவிட்டது. 

# நிர்பயா வழக்கில் அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகிய 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தண்டனையைக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்றம்   2017 மே 5அந்தத் தண்டனை உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

# மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் 16-ல் அபுசலீம் உள்ளிட்ட ஆறுபேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஃபைரோஸ் கான், தஹிர் மெர்ச்சன்ட் ஆகியோருக்கு மரண தண்டனையும் கரிமுல்லா கானுக்கும் அபு சலீமுக்கும் ஆயுள் தண்டனையும் ரியாஸ் சித்திக்கு 10 ஆண்டு தண்டனையும் என செப்டம்பர் 7-ல் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. 

# 2017 ஆகஸ்ட் 22 முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது எனத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஷாய்ரா பானு என்பவர் மே11-ல் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. 

# தியோஹர் மாவட்ட கருவூலத்தில் ரூ. 84.5 கோடியை எடுத்தது தொடர்பான வழக்கில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என டிசம்பர் 23-ல் தீர்ப்பு வழங்கியது.

ஜூலை

ஜூலை 6: இந்தியாவின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றார். இவரின் பதவிக்காலம் 2018 ஜனவரியுடன் முடிவடைகிறது.

ஜூலை 6: போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியிலோ, கல்லூரியிலோ சேர்ந்திருப்பவர்களின் பணியையும் பட்டத்தையும் பறிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜூலை 13: 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், 60 கோடி ஒளியாண்டுகள் அளவில் பரவியிருக்கும் பிரம்மாண்டமான ‘சரஸ்வதி’ என்னும் விண்மீன் பெருங்கூட்டங்களை (Supercluster of galaxies) இந்திய வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஜூலை 19: நாகா மக்கள் முன்னணிக் (NPF) கட்சியைச் சேர்ந்த டி.ஆர். ஸேலியாங் நாகாலாந்தின் 19-வது முதல்வராகப் பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 58 சட்டமன்ற உறுப்பினர்களில் 47 பேரின் ஆதரவுடன் பெரும்பான்மையை அவர் நிரூபித்தார்.

ஜூலை 23: 2016-ல், அதிகமான தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்ட உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் ‘தீவிரவாதத்துக்கு எதிரான நாடுகளின் அறிக்கை’யில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூலை 24: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரும், வானவியல் விஞ்ஞானியுமான யு. ஆர். ராவ், 85 வயதில் மரணமடைந்தார். இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் செயற்கை துணைக்கோளான ஆர்யபட்டா திட்டத்துக்குப் பின்னணியில் இருந்தவர்.

# தூர்தர்ஷன் வழியாக நாட்டின் சாதாரணர்களிடமும் அறிவியலை எடுத்துச்சென்றவர் யஷ்பால். அறிவியலின் வீச்சைப் பாமர மக்களும் உணரக் காரணமாக இருந்தவர். காஸ்மிக் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர். பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பதவியை அலங்கரித்தவர்களில் ஒருவர். ஜஹாங் ஊரில் பிறந்த அவர் ஜுலை 24-ல் மறைந்தார்.

ஜூலை 25: குடியரசுத் தலைவர் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பெற்று, இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் 34 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார்.

ஜூலை 26: பீஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ். இதைத் தொடர்ந்து,

ஜூலை 28 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் நிதிஷ் குமார். பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

ஜூலை 29: மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக உணவு, விவசாய அமைப்பும் (FAO), பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பும் (OECD) வெளியிட்ட 2017-2026 அறிக்கை தெரிவித்தது. 2016-ம் ஆண்டில், இந்தியா 15.6 லட்சம் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்திருக்கிறது.

ஆகஸ்ட்

ஆக. 4: இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) அலுவலகம் தெரிவித்தது. அக்டோபர் 1 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் ஆர்.ஜி.ஐ. அறிவித்தது.

ஆக. 11: இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக எம். வெங்கையா நாயுடு பதவியேற்றார். ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், 771 வாக்குகளில் 516 வாக்குகள் பெற்று அவர் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட்டிருந்தார்.

ஆக. 17: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் முதல் பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) எல்லை நகரமான அமிர்தசரஸில் பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

ஆக. 18: ‘இந்தியாவின் ஹென்றி கார்ட்டியர் பிரஸ்ஸன்’ என்று புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எஸ். பால் 88 வயதில் மரணமடைந்தார்.

ஆக. 23: மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரிஷாங் கெய்ஷிங் 96 வயதில் உயிர்நீத்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றவர்களில் ஒருவர் இவர்.

ஆக. 24: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஷ்வனி லோஹானி பொறுப்பேற்றார்.

ஆக. 27: நாட்டின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார். ஜே.எஸ். கேஹர் ஓய்வுபெற்றதை அடுத்து தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற இவரின் பதவிக் காலம் அக்டோபர் 2, 2018 அன்று முடிவடைகிறது.

ஆக. 31: இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.7 சதவீதமாக இருப்பதாக அரசு தரவுகள் வெளியாயின.

செப்டம்பர்

செப். 3: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. 32 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. 9 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 73-லிருந்து 76 ஆக அதிகரித்தது.

செப். 10: இந்தியாவின் பாய்மரக் கப்பலான ‘ஐ.என்.எஸ்.வி. தாரிணி’யில் மகளிர் கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண்கள் உலகைச் சுற்றிவருவதற்கான ‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்ற பயணத்தை கோவாவிலிருந்து தொடங்கினர். இந்தப் பயணம் 2018 ஏப்ரலுடன் நிறைவடைகிறது.

செப். 14: மும்பை-அகமதாபாத் ‘புல்லட்’ ரயில் திட்டத்துக்கு இந்தியப் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.

2CH_Oct27Punathil புனத்தில் குஞ்சப்துல்லா right

செப். 23: உலக அணுத் தொழிற்சாலை நிலை அறிக்கை 2017-ன் ஆய்வு முடிவுகள்படி, ஆறு அணு உலைகளை நிறுவியிருக்கும் இந்தியா, அணுசக்தியில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

 

செப். 25: இந்தியாவின் அடுத்தத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ராஜிவ் மகரிஷி பதவியேற்றார். இவர் ஆகஸ்ட் 2020 வரை இந்தப் பதவியில் தொடர்வார்.

செப். 26: தீபக் நாயர், சஞ்ஜீவ் தாஸ், நரேஷ் பட்வாரி, சுரேஷ் பாபு, அலோகே பால், நீலேஷ் மேத்தா, அமித் தத், தீபக் கவுர், நிஸ்ஸிம் கனேகர், வினய் குப்தா ஆகிய பத்து விஞ்ஞானிகளுக்கு ‘சாந்தி ஸ்வரூப் பட்னாகர்’ என்ற நாட்டின் உயரிய அறிவியல் விருது வழங்கப்பட்டது.

செப். 30: ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், பிஹார் ஆளுநராக சத்ய பால் மாலிக், அசாம் ஆளுநராகப் பேராசிரியர் ஜகதீஷ் முகி, மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாசல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி. மிஷ்ரா நியமிக்கப்பட்டார்கள்.

09e32b08அக்டோபர்

அக். 2: உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை அம்மாநில பாஜக அரசு நீக்கியது.

அக்.11: சூரிய ஒளி மின் தகடு ஊழல் விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதலாமைச்சர் உம்மன் சாண்டி மீது வழக்கு தொடர கேரள அரசு முடுவெடுத்தது.

அக். 12: அணு ஆயுத பெருக்கத் தடுப்பு ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்தது.

அக். 13: மத்திய கால இந்திய வரலாற்று ஆய்வாளரும் கல்வியாளருமான சதீஷ் சந்திரா 95 வயதில் மறைந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

அக். 20: உலகில் மாசு தொடர்பான இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தது ‘லான்செட்’ (The LanceT) மருத்துவ இதழ். 2015-ம் ஆண்டில், இந்தியாவில் மாசு காரணமாக 25, 10,000 பேர் இறந்திருப்பதாக அந்த இதழின் அறிக்கையில் வெளியிடப்பட்டது.

அக். 27: மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞசப்துல்லா 77 வயதில் காலமானார். தொழில்முறை மருத்துவராக இருந்த இவர் பேப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்.

அக். 31: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 2017-ம் ஆண்டு காசநோய் அறிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி புதிய காசநோயாளிகளில் 64 சதவீதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

0b9d82ad சக்தி மாயா, ரூபா, ஆஸ்தா சேகல், சுபாங்கி ஸ்வரூப்rightநவம்பர்

நவ. 1: பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து சிதறியதில் 25 பேர் பலி, 200 பேர் காயமடைந்தனர்.

நவ. 3: புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் கிருஷ்ண சோப்திக்கு 2017-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. ஞானபீட விருது பெறும் எட்டாவது பெண் இவர்.

நவ. 21: வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான முதல் மாநாட்டைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூரில் தொடங்கிவைத்தார். வட கிழக்கு மாநிலங்களின் வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

2CH_Dec10LaljiSingh லால்ஜி சிங்

நவ. 23: இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் நியமிக்கப்பட்டார். கடல்சார் உளவு விமானப் பிரிவில் அவர் பணியாற்றவிருக்கிறார். சுபாங்கியுடன் டெல்லியைச் சேர்ந்த ஆஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா ஆகியோர் கடற்படையின் ஆயுத சோதனைப் பிரிவு அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நவ. 24: 5-வது உலகளாவிய இணையவெளி மாநாட்டைப் (Global Conference on Cyber Space) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு, முதன்முறையாக இந்த இணையவெளி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.

நவ. 27: ஷக்திகந்த தாஸ், இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக (Sherpa) டிசம்பர் 31, 2018 வரை பதவி வகிப்பார் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

டிசம்பர்

டிச. 10: ரூ. 1,756 கோடியில் ‘விளையாடு இந்தியா’ (கேலோ இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்தார்.

இந்தியாவின் டி.என்.ஏ. கைரேகை இயலின் தந்தையாகக் கருதப்பட்ட டாக்டர் லால்ஜி சிங் 70 வயதில் காலமானார். மக்கள்தொகை உயிரியல், கட்டமைப்பு உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக பிரத்யேகமான ஆய்வகங்களை உருவாக்கியவர் இவர்.

2CH_Oct13SatishChandra சதீஷ் சந்திரா right

டிச. 11: இந்தியா ஒருங்கிணைத்திருந்த 7-வது சர்வதேச நிலத்தடி நீர் மாநாடு டெல்லியில் டிசம்பர் 11 முதல் 13 வரை நடந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள்: ‘நீர் பாதுகாப்பு, சவால்கள், பருவநிலை மாற்றத்துக்கான தகவமைத்தல்’.

டிச. 11: ரஷ்யா-இந்தியா-சீனா ஆகிய முத்தரப்பு நாடுகளின் 15-வது வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு டெல்லியில் நடந்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ரஷ்யாவின் செர்கே லவ்ரோவ், சீனாவின் வாங் யி ஆகியோர் மூன்று நாடுகளின் வெளியுறவு ஒத்துழைப்புக் கொள்கைகள் பற்றி விவாதித்தனர்.

டிச. 19: இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (Indian Institutes of Management) முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்குப் பதிலாகப் பட்டப் படிப்புகளை வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டிச. 20: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் நாட்டின் முதல் தேசிய ரயில் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் (National Rail and Transport University) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டிச. 21: நாட்டின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது, 24 மொழிகளின் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

டிச. 26: குஜராத் மாநிலத்தின் 16-வது முதல்வராக விஜய் ரூபானி, 19 அமைச்சர்களுடன் பதவியேற்றார். நிதின் பட்டேல் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x